திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஒவ்வொரு இடமும் மிகவும் அழகானவே. அங்கு நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. பழமையும், புதுமையும் சமமாகக் கலந்திருக்கும் ஓர் அழகான இடம் அது. சிலவற்றை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும், ஆம், திபெத் பயணமும் அப்படித்தான். ஆனாலும், திபெத்தின் தனிச்சிறப்புக்களை இன்றைய நிகழ்ச்சி மூலம் புரிய வைக்க நீங்கள் செய்த முயற்சி நன்றாக இருந்தது. லாசா நகரின் காற்றில் ஆக்சிஜன் அளவு 58 விழுக்காடுதான். லாசா நகருக்கு நண்பகல் சென்ற எங்களுக்கு, அன்று முழுவதும் ஓய்வு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சில நண்பர்களுடன் இணைந்து, அன்று மாலையே போதல மாளிகைக்கு நான் சென்று இரவில் அதன் அழகை கண்டுகளித்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஐந்து நிமிடங்கள் நடந்து சென்றால் போதல மாளிகையை சென்றடையலாம்.
போதலமாளிகை, நாம்சோ ஏரி போன்றவற்றை கண்டு, விரிவான தகவல்களை நேயர்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். அன்றி, கலையரசியும், மைக்கேலும் மேற்கொள்ளும் திபெத் பயணம் மாபெரும் வெற்றி பெற என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.