• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
70வது ஆண்டு நிறைவாகும்
  2011-08-23 17:07:35  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு, சீன வானொலி நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவாகும். 1941ம் ஆண்டு யான் ஆனிலுள்ள குகையிலிருந்து ஒலிபரப்பப்பட்ட முதல் ஒலியிலிருந்து தற்போதைய 61 மொழி ஒலிப்பரப்புகள் வரை, சீன வானொலி நிலையம் பேரளவு வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் அருமையான உணர்ச்சிப்பூர்வமான எண்ணற்ற கதைகள் உள்ளன. அன்புள்ள நேயர்களே, சீன வானொலியுடன் இணைந்து 70 ஆண்டுகாலத்தை கடந்து பயணிப்பதற்கு நன்றி தெரிவிக்கின்றோம். ஆகஸ்டு 29ம் நாள் முதல், சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவுப்போட்டி, வானொலியிலும் இணையதளத்திலும் ஒரேநேரத்தில் நடைபெறும்.

இந்தப் பொது அறிவுப்போட்டியின் 4 கட்டுரைகள், ஆகஸ்டு 29 தொடங்கி செப்டம்பர் முதல் நாள் வரை முதல் முறை ஒலிபரப்பாகும். மேலும், அதிக நேயர்கள் போட்டியில் பங்கெடுபதற்காக, செப்டம்பர் 19 முதல் 22ம் நாள் வரை, அக்டோபர் 10 முதல் 13ம் நாள் வரை இந்தக் கட்டுரைகள் மீண்டும் மறு ஒலிபரப்பு செய்யப்படும். ஒவ்வொரு கட்டுரையிலும் இரண்டு வினாக்கள் இடம்பெறும். கட்டுரைகளை கவனமுடன் கேட்டு, விடைத்தாளில் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அனைத்து விடைதாள்களும் அக்டோபர் திங்கள் 31ம் நாளுக்குள் தமிழ்ப்பிரிவுக்கு வந்தடைய வேண்டும். போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040