• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முக்கிய பதிவுகள்
  2011-10-19 11:15:08  cri எழுத்தின் அளவு:  A A A   
நவ சீனா நிறுவப்பட்ட பின், சீனாவின் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சோ அன் லாய், பல முறை தொலைபேசி மூலம் ஐ•நாவின் தலைமைச் செயலாளர், ஐ•நா பொது பேரவையின் தலைவர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, சீன மக்கள் குடியரசு, சீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சட்டப்பூர்வமான அரசு என்பதை உறுதிப்படுத்தினார்.

1961ஆம் ஆண்டு, ஐ•நாவில் சீனாவின் பிரதிநிதித்துவ உரிமைப் பிரச்சினையை ஐ•நா பொது பேரவைக் கூட்டத்தின நிகழ்ச்சி நிரல்களில் வைக்க 16வது ஐ•நா பொது பேரவை முடிவு எடுத்தது. நவ சீனா, ஐ•நாவில் சட்டப்பூர்வமான உரிமை மீண்டும் பெறுவதில் அமெரிக்கா போட்ட தடைகளுக்கு எதிரான மாபெரும் முன்னேற்றம் இதுவாகும்.

1970ஆம் ஆண்டு, ஐ•நாவில் நவ சீனா சட்டப்பூர்வ உரிமையை மீண்டும் பெறுவதற்கு ஆதரவாகத் தெரிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை எதிரான வாக்கு எண்ணிக்கையை முதன்முதலாக தாண்டியது.

1971ஆம் ஆண்டின் ஜூலை திங்களில், 26வது ஐ•நா பொது பேரவைக்கு முக்கிய பிரச்சினைக்கான வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் முன்வைத்தது. அத்துடன், இரட்டைப் பிரதிநிதித்துவ உரிமைகள் என்ற வரைவுத் தீர்மானத்தை உருவாக்கி, இரு சீனா என்ற சூழ்ச்சியை நடைமுறைப்படுத்த முயற்சித்தது.

1971ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள், 26வது ஐ•நா பொது பேரவை கூட்டத்தில் 59 வாக்குகள் எதிராகவும், 55 ஆதரவாகவும், 15 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமலும் இருந்த நிலையில், முக்கிய பிரச்சினைக்கான அந்த வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதை அடுத்து, 76 வாக்குகளின் ஆதரவாகவும், 35 எதிராகவும், 17 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமலும் இருந்த நிலையில் அல்பேனியா, அல்ஜீரியா முதலிய 23 நாடுகளின் வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் ஐ•நாவில் சீன மக்கள் குடியரசின் அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளையும் மீட்டெடுப்பது, கோ மின் தாங் கட்சிக் குழுவின் பிரதிநிதிகளை ஐ•நா மற்றும் அதன் கீழ் இருந்த நிறுவனங்களிலிருந்து வெளியேற்றுவது ஆகியவை அடங்கும். அதுவே ஐ•நா வரலாற்றில் புகழ் பெற்ற ஐ•நா பொது பேரவையின் 2758ஆம் இலக்க தீர்மானமாகும். அரசியல், சட்டம், ஒழுங்கு முறை ஆகியவற்றில் ஐ•நாவில் சீனாவின் பிரதிநிதித்துவ உரிமைப் பிரச்சினையை நியாயமாகவும் முற்றாகவும் இந்தத் தீர்மானம் தீர்த்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040