• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தன்னார்வத் தொண்டர்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் ஆசிரியர் அம்மா
  2011-10-28 13:56:42  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனப் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருவதால் பெற்றோர் இருந்தும் அவர்களோடு வாழாத குழந்தைகள் என்ற சிறப்புச் சொல் தோன்றியுள்ளது. அச்சொல்ல, ஒரு குழந்தையின் பெற்றோரோ அல்லது அவர்களில் ஒருவரே வெளியூருக்குச் சென்று பணிபுரியும் போது, கிராமத்தில் வாழும் குழந்தைகளைக் குறிக்கின்றது. அக்குழந்தைகள், தமது பெற்றோரில் ஒருவருடனோ அல்லது பாட்டி, தாத்தா, பெற்றோரின் இதர உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனோ கூடி வாழ்கின்றனர்.

சியோ யுல், ஜியாங் சூ மாநிலத்தின் தாய்ஜோ நகரத்தில் தாய்டோங் ஆய்வுத் துவக்க பள்ளியின் ஒரு மாணவியாவார். பெற்றோரும் தாத்தாவும் பெய்ஜிங்குச் சென்று பணிபுரிந்து வருவதால், ஏறக்குறைய ஓராண்டு காலத்தில் அவள் தமது பெற்றோரைப் பார்க்கவில்லை. "நான் ஏறக்குறைய ஓராண்டாக அம்மாவையும் அப்பாவையும் பார்க்கவில்லை, அவர்களை நினைத்து மிகவும் ஏங்குகிறேன். குறிப்பாக பள்ளிக்கூடம் துவங்கும் நேரத்தில் சில குழந்தைகளின் அம்மாவும் அப்பாவும் அவர்களது குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு செல்வதைக் காணும் போது, மிகவும் ஏக்கமாக உள்ளது." என்று சியோ யுல் கூறினார்.

தாய்டோங் ஆய்வுத் துவக்க பள்ளி தாய்ஜோ நகரத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது. இப்பள்ளியின் சீனக்கம்யூனிஸ்ட் இளைஞர்

அணியின் செயலாளர் சென் வே கூறியதாவது:

"2011ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை, 1204 மாணவர்கள் படிக்கும் எமது துவக்கப்பள்ளியில், பெற்றோர் இருந்தும் அவர்களோடு வாழாத குழந்தைகளின் எண்ணிக்கை 33 ஆகும். 512 மாணவர்கள் கொண்ட இடைநிலைப் பிரிவி்ல் பெற்றோர் இருந்தும் அவர்களோடு வாழாத 7மாணவர்கள் படிக்கின்றனர்."என்று அவர் கூறினார்.

பெற்றோரோடு வாழாத அந்தக் குழந்தைகளுக்கு அக்கறை மற்றும் அன்பு காட்டும் பொருட்டு, ஆசிரியர் அம்மா என்ற தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி, பள்ளியுடன் ஒத்துழைத்து விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தத் தாய்ஜோ நகரின் தாய் டோங் ஆய்வுத் துவக்க பள்ளி 2008ஆம் ஆண்டு தொடக்கத்தில் அனைத்து இளம் பெண் ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது. ஆசிரியர் அம்மா என்பதை எழுதிய துணி பதாகையில் 36 இளம் பெண் ஆசிரியர்கள் முன்முயற்சியுடன் கையொப்பமிட்டு, ஆசிரியர் அம்மா என்னும் தன்னார்வத் தொண்டராக மகிழ்ச்சியுடன் மாறினர். அச்செயல்பாடு தொடங்கியது முதல் இதுவரை, 36 தன்னார்வத் தொண்டர்களாக இரந்தோர் இப்போது 83பேராக அதிகரித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் 35 வயதுக்குப்பட்ட ஆசிரியராவர். தமக்குக் குழந்தைகள் இல்லாமல் இருந்த போதிலும், தாய் பாசத்தை அவர்கள் இந்தக் குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர். இப்பள்ளியில் அம்மா ஜோ என்று மாணவர்களால் அழைக்கப்படுகின்ற ஆசிரியர் ஜோ ஷுயுமெய் கூறியதாவது:

"பெற்றோருடன் வாழாத குழந்தைகளுக்கு, படிப்பிலும் வழிகாட்டுபவர் இல்லை, வாழ்க்கையிலும் கவனம் செலுத்துபவர் இல்லை. இது போன்ற கொடுமையான நிலைக்கு இந்தக் குழந்தைகள் ஆளாகி, இரக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். இப்படியான குழந்தைகளிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும்."என்று அவர் கூறினார்.

சியோ யுல் தாத்தாவுடன் வாழ்ந்து வருகிறாள். குடும்பத்துக்கு ஒரே ஒரு குழந்தையாக இருப்பதால், பெற்றோருடன் வாழாத சியோ யுல் தாத்தாவிடமிருந்து அளவு மீறிய அன்பு பெறுகிறாள். இந்த நிலையை அறிந்த பிறகு, சியோ யுல்வின் வகுப்பு ஆசிரியராகிய சுவாங் ஆய் சேன் அவளிடம் மிகுந்த கவனம் செலுத்தினார். ஆசிரியர் சுவாங் கூறியதாவது:

"ஓய்வு நேரத்தில், அவளை வரவழைத்துப் பேசி, அவளின் குடும்ப நிலைமையை அறிந்து கொள்கிறேன். அத்துடன் தாத்தாவை மதிப்பதோடு, தாத்தா சொல்வதைக் கேட்டு நடக்குமாறு அவளுக்கு அறிவுறுத்துகிறேன். அவர் நன்றாகப் படிக்கும் பொருட்டு, நண்பகல் ஓய்வு நேரத்தில் அவளுக்கு மேலதிக பாடங்களைக் கற்றுக் கொடுப்பது உண்டு. சில சமயம், நான் அவர் வீட்டுக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுத்து உதவுகிறேன். அவளது தாத்தா கூறுகையில், ஆசிரியர், நீங்கள் சியோ யுல்விடம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை என்றார். அதைக் கேட்ட போது, குழந்தை உடல் நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், எனது பணியின் களைப்பு தெரியாமல் போய்விடுமென தாத்தாவிடம் அவர் சொன்னதாக ஆசிரியர் சுவாங் கூறினார்.

ஆசிரியர் சுவாங்கால் இனிமையாகக் கவனிக்கப்பட்ட சியோ யுல் முன்பு இருந்ததை விட, இப்போது செவ்வனே மேம்பட்டு, நன்றாகப் படித்து வருகிறார்.

மாணவர் சியோ டௌவின் பெற்றோர் நீண்டகாலமாக வெளியூரில் வேலை செய்து வருவதால், சியோ டௌ பாட்டி தாத்தாவுடன் வாழ்கிறார். பெற்றோரின் அன்பு சரியாகக் கிடைக்காமல் இருந்த அவர் விரைவாக உணர்ச்சி வசப்பட்டு, அடிக்கடி கோபம் கொள்கிறார். ஆனால் ஆசிரியர் அம்மாவின் கவனம் கிடைத்த பிறகு, சியோ டௌ சிரிப்புடன் நடந்து கொள்கிறார். படிப்பிலும் தெளிவான முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

ஆய்வுத் தரவுகளின் படி, தற்போது சீனாவிலுள்ள கிராமப்புறங்களில் பெற்றோர் இருந்தும் அவர்களோடு வாழாத குழந்தைகளின் எண்ணிக்கை 5 கோடியே 80 இலட்சத்திற்கு மேலாகும். அவர்களில் கிட்டதட்ட 57 விழுக்காட்டுக் குழந்தைகள் தாய் அல்லது தந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர். 43 விழுக்காட்டுக் குழந்தைகள் பெற்றோருடன் வாழவில்லை. வெளியூருக்குச் சென்று பணிபுரியும் பெற்றோர் தமது மகன் மற்றும் மகள்களுடன் தொடர்பை வைப்பது குறைவாக இருப்பதால், அக்குழந்தைகளின், உள நலம், பண்பு நலன்களில் அதிக பிரச்சினைகள் நிலவுகின்றன. மேலும் அவர்களின் படிப்பும் பாதிக்கப்படக் கூடும். அது குறித்து, சீன அரசும் தொடர்புடைய வாரியங்களும் அதில் பெரும் கவனம் செலுத்தி, பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தலைமை அமைச்சர் வென் சியாபாவ் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் ஷன் ஷி மாநிலத்தில் கள ஆய்வு செய்த போது, பெற்றோர் இருந்தும் அவர்களோடு வாழாத குழந்தைகளைப் பார்க்கச் சிறப்பாகச் சென்றார். இப்போது, இத்தகைய குழந்தைகளுக்கு தாய் பாசத்தை வழங்கி, அவர்களை உடல் நலத்தோடு வளரச் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கை வழங்கிச் சாதனைகளைப் பெறச் செய்வதற்கு, சீன சமூகம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040