• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிராம அலுவலரான ஆசிரியர் Shen Ping
  2011-11-02 16:58:49  cri எழுத்தின் அளவு:  A A A   
கோடைக்காலம், மாணவர்கள் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கின்றனர். ஒரு நாள் பிற்பகல், Gao Li Zhuang கிராமத்தில் பாடம் சொல்லித் தரும் ஒலி கேட்டது. 20க்கு அதிகமான குழந்தைகள், "ஆசிரியரின்" வழிகாட்டலுடன் பாடத்தை வாசித்துக் கொண்டிருந்தனர். Shen Ping என்ற இந்த ஆசிரியருக்கு வயது 24. அவர், Gao Li Zhuang கிராமத்தின் "அலுவலராக" திகழ்கிறார்.

Gao Li Zhuang கிராமம், Jiang Su மாநிலத்தின் Xing Hua நகரின் Chen Bao வட்டத்தில் இருக்கிறது. தற்போது சீனாவில் உள்ள இதர பல கிராமங்களைப் போல், இக்கிராமத்தில் சிறப்பான ஒரு நிலையில் சில குழந்தைகள் இருக்கின்றனர். இக்குழந்தைகளின் பெற்றோர் ஊரை விட்டு, தொலைதூர நகருக்குச் சென்று பணி புரிகின்றனர். சிறு வயதிலிருந்தே இக்குழந்தைகள், தங்களது தாத்தா மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து, ஆண்டில் சில முறைகள் மட்டுமே பெற்றோரைச் சந்திக்க முடியும். இந்த குழந்தைகள், "பெற்றோரின் பணி காரணம் அவர்களோடு வாழாத குழந்தைகள்" என அழைக்கப்படுகின்றனர்.

புள்ளி விபரங்களின் படி, தற்போது, சீனாவின் கிராமங்களில், "பெற்றோரின் பணி காரணம் அவர்களோடு வாழாத குழந்தைகளின்" எண்ணிக்கை, 5 கோடியே 80 லட்சத்தைத் தாண்டியுள்ளது. Gao Li Zhuang கிராமத்தில் சுமார் 30 இத்தகைய குழந்தைகள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் வசந்த விழாவின் போது மட்டுமே இக்குழந்தைகளின் பெற்றோர் ஊருக்குத் திரும்புகின்றனர். சில குழந்தைகளின் பெற்றோர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்குத் திரும்புகின்றனர்.

இக்குழந்தைகள், தங்களது பெற்றோருடன் கூட்டாக செலவழிக்கும் நேரம் குறைவு. தாத்தாக்களும், பாட்டிகளும் இக்குழந்தைகளை வளர்ப்பதில், பெரிதளவு பயன்கள், பெற்றோரின் அன்பு, அரவணைப்பு ஆகியவை கிடைப்பதில்லை. பெற்றோரின் பணி காரணம் அவர்களோடு வாழாத குழந்தைகளில், பெரும்பாலானோர் குடும்பத்தினரின் அக்கறையையும் அன்பையும் பெற முடியவில்லை. இது அவர்களின் உளநலம், கல்வி மற்றும் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில குழந்தைகள், பலவீனமானவராகவும், தாழ்வு மனப்பான்மை கொண்டுள்ளவராகவும் மாறியுள்ளனர். பெற்றோரின் பணி காரணம் அவர்களை பிரிந்து வாழும் குழந்தைகளின் பிரச்சினை, சமூகத்தின் பல்வேறு துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகமானோர் இக்குழந்தைகளுக்கு உதவ முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இளம் "கிராம அலுவலர்" Shen Ping அவர்களில் ஒருவர் ஆவார். 2009ஆம் ஆண்டு Shen Ping பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித் துறையிலிருந்து பட்டம் பெற்ற பின், மாநகரில் தங்கியிருந்து வேலை செய்வதற்குப் பதிலாக, Gao Li Zhuang கிராமத்துக்கு வந்து, "கிராம அலுவலர்" என்ற பதவியை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் பிரிவு செயலாளராக வேலை செய்கிறார். 2010ஆம் ஆண்டு கோடைக்கால விடுமுறை முதல், கிராம அலுவலராக வேலை செய்வதைத் தவிர, "பெற்றோரின் பணி காரணம் அவர்களோடு வாழாத குழந்தைகள் மகிழ்ச்சியான, அருமையான கோடைக்கால விடுமுறையைக் கழிக்கச் செய்வது" என்ற தலைப்பில், இலவச ஆங்கில மொழி பயிற்சி வகுப்பை அவர் நடத்துகிறார். இக்கிராமத்தில் குளிர்காலம் மற்றும் கோடைக்கால விடுமுறையில் ஆங்கில மொழி பயிற்சியைப் பெற வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டப் பின், தேவைக்கிணங்க, அவர் பாடங்களை ஏற்பாடு செய்கிறார். Shen Ping செய்தியாளரிடம் கூறியதாவது:

"தற்போது இப்பயிற்சி வகுப்பில் 25 மாணவர்கள் இருக்கின்றனர். நாள்தோறும் பிற்பகல் இரண்டரை மணி முதல் ஐந்தரை மணி வரை குழந்தைகளுக்குப் பாடங்களை நடத்தி, பண்பாட்டு அம்சங்களை கற்றுக்கொடுக்கின்றேன். அவர்களின் ஒட்டுமொத்த அறிவை அதிகரிக்க விரும்புகிறேன். அறிவாற்றல் தலைவிதியை மாற்ற முடியும் என்றும், கல்வி நம்பிக்கைச்சுடரைத் தர முடியும் என்று கருதுகிறேன். களைப்பாக இருந்த போதிலும், குழந்தைகளின் புன்சிரிப்பைக் கண்டு, மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குழந்தைகளின் சீரான வளர்ச்சியைத் தூண்டி, வெளியூரில் வேலை செய்யும் அவர்களின் பெற்றோரின் கவலையை நீக்கி, உள்ளூர் பொது மக்களுக்கு உண்மையில் நன்மை புரிவது என்பது, எனது மிகப் பெரிய விருப்பமாகும்" என்றார் Shen Ping.

மாணவர்கள் நாட்தோறும் பயிற்சி வகுப்பில் கற்றுக்கொள்கின்றனர். பண்பாட்டுப் பாடங்களை தவிர, ஆங்கில மொழி பேசும் நாடுகளின் நடையுடை பாவனைகளை Shen Ping மாணவர்களுக்குச் சொல்லி தந்து, அவர்களின் பார்வையை விரிவாக்குகின்றார். இது மட்டுமல்ல, வெளியூரில் பெற்றோர் வேலை செய்யும் பரப்பரப்பான சூழலையும் கடினமான நிலையையும் மாணவர்களுக்கு அவர் தெரிவிக்கிறார். இதன் மூலம் பெற்றோர் பணி காரணம் அவர்களை பிரி்ந்து வாழும் குழந்தைகள் கல்வி பயிலும் வேளையில், தங்களது பெற்றோரின் கடினமான நிலையையும் புரிந்து கொண்டுள்ளனர். 14 வயதான Zhou Wen Ting ஜுனியர் இடைநிலைப் பள்ளியின் மூன்றாவது வகுப்பில் கல்வி பயில்கின்றார். அவரது பெற்றோர் வெளியூரில் வேலை செய்கின்றனர். அவர் தனது தாத்தாவுடன் வாழ்கின்றார்.

Zhou Wen Ting கூறியதாவது, "பயிற்சி வகுப்பில் கல்வி பயில்வதன் மூலம், அறிவை வளர்ப்பதோடு, எனது பெற்றோரை பற்றியும் புரிந்து கொண்டுள்ளேன். தற்போது, எனது தாத்தாவுக்கு உதவ என்னால் இயன்றதனைத்தையும் செய்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

Shen Pingவின் முயற்சிகளினால், Gao Li Zhuang கிராமத்தில் பெற்றோரை பிரிந்து வாழும் குழந்தைகளின் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில குழந்தைகளின் பெற்றோர் வெளியூரிலிருந்து தொலைபேசி மூலம் Shen Pingக்கு நன்றிகள் தெரிவித்து, குழந்தைக்கு அவர் கற்றுக்கொடுக்கும் நல்ல முயற்சியை பாராட்டுகின்றனர்.

குழந்தைகளின் புன்னகையில், தமது சளையாத முயற்சிகளின் மதிப்பை Shen Ping பார்க்கின்றார். அவரது பணியை கிராமவாசிகள் ஆதரித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். 2010ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் நடைபெற்ற தேர்தலில், Shen Ping பெரும்பான்மை ஆதரவுடன் Gao Li Zhuang கிராமத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பிரிவின் துணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மட்டுமல்ல, கிராமக் கமிட்டியின் தேர்தலில், இக்கிராமத்தில் 85 விழுக்காட்டு வாக்காளர்களின் ஆதரவை பெற்று, இக்கிராமக் கமிட்டித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். Gao Li Zhuang கிராமத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவுச் செயலாளர் Zhou Li Hong கூறியதாவது:

"எங்கள் கிராமத்தில் Shen Pingகின் பணிகளால் சாதனைகள் பெறப்பட்டுள்ளன. அவர் தகுதியான கிராமத் தலைவராக இருக்கின்றார்" என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040