• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தன்னார்வத் தொண்டர்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி
  2011-11-02 16:51:44  cri எழுத்தின் அளவு:  A A A   
கடவுள் உங்களுக்கு ஒரு கனவை நனவாக்க வேண்டுமானால், உங்களுக்கு என்ன கனவை நனவாக்க வேண்டும் என குறிப்பிடுங்கள். நான் ஒரு மிதிவண்டி வைத்திருக்க ஆசைப்படுகின்றேன். மிதிவண்டி இருந்தால், பள்ளிக்கு மிகவும் விரைவாகச் செல்லலாம், அது மட்டுமல்ல, வகுப்பு முடிவடைந்தவுடன் என்னால் வேகமாக வீட்டுக்குத் திரும்ப முடியும். அம்மாவுக்கு உதவி செய்யலாம். பாட்டியையும் கவனிக்கலாம். இது தான் 12வயதான சிறுமி சிவேயோயுவானின் கனவு அட்டையில் இடம் பெற்றிருந்தது. சிவேயோயுவான் வட சீனாவின் லியோ நின் மாநில பாஃகூ மாவட்ட யினியோசி துவக்கப் புள்ளியில் 5 ஆம் வகுப்பில் படிக்கின்ற மாணவி. அவள் படிப்பிலும் பண்பிலும் மிகச் சிறந்தவள் என அவளது ஆசிரியர் கூறுகின்றார். அவளின் குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். வயது மிகுந்த பாட்டி உடல் நலக்குறைவால் துன்பப்படுகின்றார். அம்மா கடும் உள் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி. முழு குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவளது தந்தை பிற இடத்தில் வேலை செய்து வருகிறார். வகுப்பிலுள்ள பிற மாணவர்களை விட, அவளின் குடும்ப நிலைமை மிகவும் இன்னலானது. எனினும், அவள் எப்போதும் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாகவும் பலமாகவும் படித்து வாழ்கின்றாள்.

சிவேயோயுவானின் கனவு அட்டை, கனவு நனவாக்கம் என்னும் இணையதளத்தின் பல அட்டைகளில் ஒன்றாகும். இந்த இணையதளம் லியொ நின் மாநிலத்தின் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் நடத்தும் ஒரு வரியுடைய ஆயிரம் கனவுகளை நனவாக்குவோம் என்னும் நடவடிக்கைகளின் ஒரு வழிமுறையாகும். ஆயிரம் கனவுகளை நனவாக்க உதவவல்ல ஆயிரம் பேரைத் தேடுவது இந்நடவடிக்கையின் நோக்கமாகும். அது லியொ நின் மாநிலம் மேற்கொள்ளும் பிறருக்கு அன்பு செலுத்தும் செயற்பாடுகளில் ஒரு முக்கிய பகுதியாகும். கனவுகளை நனவாக்கும் ஆயிரம் பேர் என்பது நம் சமூகத்திலுள்ள நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள், சமூக அமைப்புகள், தனிநபர்களிடமிருந்து கண்டறியப்படுகின்றனர். அவர்கள் குழந்தைகளின் கடவுகளை நிறைவுபடுத்துவதோடு அறக்கொடை நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள விரும்புவராகத் திகழ வேண்டும்.

லியொ நின் மாநிலத்தி்லுள்ள இளம் தொண்டர்கள் சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் யிசென்லெ இந்நடவடிக்கையைத் திட்டமிட்டவர்களில் ஒருவராவார். விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அன்பு செலுத்தும் முறையில், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உதவும் நடவடிக்கை நனவாக்கப்படும். இந்தக் கனவை நனவாக்கும் நடவடிக்கையில் தோவான்யுவான் தொண்டர்களை ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பானவர். அவர் ஒரு தன்னார்வத் தொண்டரும் ஆவார். இந்த நடவடிக்கை துவங்கியது முதல், சமூகத்திலுள்ள பல்வேறு துறைகள் இதில் பெரும் கவனம் செலுத்தி ஆதரவு அளித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இவ்வளவு அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுடைய கனவை நனவாக்கும் நடவடிக்கையில் கலந்து கொள்வார்கள் என நாம் தொடக்கத்தில் நினைக்கவில்லை. பல்வகை துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்நடவடிக்கையில் சுயநலமின்றி பங்கேற்கின்றனர். ஒரு முறை, தந்தை ஒருவர் அவரது இரு குழந்தைகளோடு இந்தக் கனவை நனவாக்கும் நடவடிக்கையில் கலந்து கொண்டார். அதில் பங்கெடுத்ததும் அவரது குழந்தைகள் மிகவும் மனவுருகினர். வறிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு உடனே அவர்கள் 20ஆயிரம் யுவானைக் நன்கொடையாக வழங்கினர். அவர்களின் இன்ப வாழ்வு எவ்வளவு செல்வமாயிருக்கின்றது. தற்போது, நம் நாட்டில் இன்னும் அதிகமான குழந்தைகள் வறுமையால் அல்லல்படுவதை என் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகின்றேன் என்று நடவடிக்கையில் கலந்து கொள்ளும் போது, அந்தத் தந்தை கூறினார்.

இந்த நடவடிக்கையைப் பின்பற்றிப் பேட்டி கண்ட போது, செய்தியாளர்கள் பல தன்னார்வத் தொண்டர்களை அறிந்து கொண்டனர். ஷிமின் என்பவர் அவர்களில் ஒருவாராவார். இவ்வாண்டின் கோடைக்கால விடுமுறையில் அவர் அவரது மனைவி யிசோகையுடன் இணைந்து இந்த அன்பு செலுத்தும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். பணமுடைவர்கள் அல்லது அதிகாரமுடைவர்கள் மட்டுமே அறக்கொடை நடவடிக்கைகளில் பங்கேற்றுத் தொண்டு புரிய முடியும் என்பதே அவளது முந்தைய கருத்தாக இருந்த்து என்று யிசோகை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது தெரிவித்தார். ஆனால், இந்த நடவடிக்கையில் கலந்து கொண்ட பின்னர் நீங்கள் தொண்டு புரியும் மனதைக் கொண்டிருந்தாலே அறக்கொடை நடவடிக்கைகளில் தொண்டராகக் கலந்து கொள்ளலாம் என்பதை யிசோகை அறிந்து கொண்டார். அந்தக் குழந்தைகளின் கனவுகள் பொது மக்களைப் பொறுத்தவரை, மிகவும் எளிதானவை. குழந்தைகளுக்கென ஒரு கனவை நனவாக்கும் போது, தன்னார்வத் தொண்டரான அவள் மனதில் இன்பத்தையும் பெருமிதத்தையும் நிறைவாகக் கொள்வாள்.

நகரங்களில் வாழ்கின்ற குழந்தைகளைப் பொறுத்தவரை எளிதாக நிறைவேற்றும் கோரிக்கைகள் விவசாயத் தொழிலாளரின் குழந்தைகளுக்கோ மிகவும் ஆடம்பர கனவுகள் ஆகும். ஒரு பள்ளிப்பை, ஒரு பேனா அல்லது ஒரு கதைப்புத்தகத்தைப் பெறுவது, சுரங்கத் தொடர்வண்டி மூலமான பயணம் அல்லது கேளிக்கைப் பூங்காவின் பயணம் மேற்கொள்வது முதலியவை கிராமப்புற குழந்தைகளின் கனவுகள் ஆகும். இந்தக் கனவை நனவாக்குவது மிகவும் எளிதானது. ஆனால் அவ்வாறு செய்வது அந்தக் குழந்தைகளைப் பொறுத்தமட்டில் மாபெரும் முக்கியமானதாகத் தோன்றுகின்றது. அவர்களின் கனவை நனவாக்க உதவி செய்வதோடு நம் நாட்டின் பல்வேறு துறைகள் அவர்களுக்குக் காட்டிய அன்பை உணரத் துணை புரிவது மேலும் முக்கியமானது.

தோயியோ மாணவி இந்தக் கனவை நனவாக்கும் நடவடிக்கைகளில் பயனடைந்தவர். அவரது குடும்பம் அவருக்கான கல்விக் கட்டணத்தை ஏற்க முடியும் போது, இந்த அன்பு நடவடிக்கை மூலம் கிடைக்கும் உதவி அவளை விட மேன்மேலும் தேவைப்படும் பிற குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். எதிர்காலத்தில் உதவி தேவைப்படுவோருக்கு தன்னால் இயன்ற அளவில் வழங்கும் அன்பை எங்கும் விரிவுபடுத்துவேன் என்று அவர் கூறினார்.

குழந்தைகள் மட்டுமல்ல தன்னார்வத் தொண்டர்களும் மொழிக்கு அப்பாற்பட்டுப் பலன் அடைந்தார்கள். இந்த நடவடிக்கை மூலம் புது அனுபவங்கள், படிப்பினைகள் பலவற்றை அடைந்து அவர்களது அன்பும் பொறுப்புணர்வும் அதிகரித்துள்ளதாக இதில் கலந்து கொண்ட தொண்டர்கள் பலர் தெரிவித்தனர்.

புள்ளிவிபரங்களின் படி, 2011ஆம் ஆண்டு மார்ச் திங்கள் ஒரு வரியுடைய ஆயிரம் கனவுகளை நனவாக்குவோம் என்னும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது முதல் இது வரை, லியொ நின் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 35ஆயிரத்து ஐந்நூற்றுக்கு அதிகமானோர் இதில் கலந்து கொண்டனர். விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மொத்தமாக 4கோடியே 20ஆயிரம் மணிநேரங்களில் அன்பும் உதவியும் அவர்கள் வழங்கியுள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு 20லட்சத்து 20ஆயிரம் யுவான் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு வானின் கீழ் வாழும் அனைத்து குழுந்தைகளும் இன்பமாகவும் சுமூகமாகவும் படித்து வாழ்வது நம் நாட்டின் அனைவரின் கனவாகும். யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றோம் என்பதென்ற சீனாவின் பாரம்பரிய நற்பன்பை நம் நாட்டில் மட்டுமல்ல முழு உலகமெங்கும் பரப்புரை செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040