• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய நகரவாசிகளின் குழந்தைகள் சேவை மையம்
  2011-11-02 17:12:46  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவில், தொழிலாளர் கிராமத்திலிருந்து நகருக்கு வந்து வேலை செய்கிறனர். அவர்களில் பலர், தனது குழந்தைகளை நகரப் பள்ளிகளுக்கு அனுப்பினர். வேலையில் நிறைய நேரம் செலவிட்டு விடுவதால், தனது குழந்தைகளைக் கண்காணித்து கற்றுகொடுக்க வாய்ப்புக்கள் குறைகின்றன. இத்தகைய குழந்தைகள், பிரச்சினைக்குரிய குழந்தைகளாக மாறாமல் எப்படி தடுப்பது என்ற எண்ணத்தின் விளைவு தான். நென் ச்சிங் நகரின் சிங் ஹுயெய் பிரதேசத்தின் ஹுங் ஹுவாய் வசிப்பிட நிர்வாக குழு, புதிய நகரவாசிகளின் குழந்தைகள் சேவை மையம் உருவாக்கியது.

நேயர்கள், நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, 2010ம் ஆண்டு உலக மேசைப் பந்து சம்பியன் பட்டம் பெற்ற விளையாட்டு வீராங்கணை வாங் நென் அம்மையார், இந்தக் குழந்தைகள் சேவை மையத்தில் ஆறுதல் தெரிவிக்க சென்ற, குழந்தைகளுடன் மேசைப் பந்து விளையாடிய ஒலி தான்.

சிங் ஹுயெய் பிரதேசம், நென் ச்சிங் நகரின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்த பிரதேசத்தில் வந்து செல்லும் மக்கள் அதிகம். ஹூங் ஹுவாய் வசிப்பிடம், இப்பிரதேசத்தின் தெற்கு முனையில் இருக்கிறது. வெளி ஊரிலிருந்து வந்த மக்கள், அங்கு தங்கியிருக்கிறனர். அவர்களின் எண்ணிக்கை, நென் ச்சிங் மக்கள் தொகையில் 55.88 விழுக்காடு வகிக்கிறது. 2007ம் ஆண்டு சிங் ஹூயெய் பிரதேசத்தின் சீனக்கம்யூனிஸ்ட் இளைஞர் லீக், ஹூங் ஹுவாய் வசிப்பிட நிர்வாக குழுவுடன் இணைந்து, வெளி ஊரிலிருந்து வந்த மக்களின் குழந்தைகள் சேவை மையத்தை உருவாக்கியது. இந்த சேவை மையம், இப்பிரதேசத்திலுள்ள குழந்தைகளுக்கு, படிப்பு, உதவி, உலநல சிகிச்சை, பசுமையான இணையம் ஆகிய இலவசச் சேவைகளை வழங்குகின்றது. இந்த பிரதேசத்திலுள்ள வெளி ஊரிலிருந்து வந்த மக்கள், இச்சேவை மையத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்த சேவை மையம், அவர்களால், நமது குழந்தைகள் மன்றம் என்றழைக்கப்படுகிறது.

வெளி ஊரிலிருந்து வந்தவரின் குழந்தைகள் சேவை மையம், அந்த மக்களிடமும், அவர்களது குழந்தைகளிடமும் 3 மாற்றங்களை நனவாக்கியுள்ளது என்று ஹூங் ஹுவாய் வசிப்பிட பணி ஆணையத்தின் தலைவர் சேன் ச்சுன் செய்தியாளரிடம் கூறினார்.

முதலில், இணக்கமான சிங் ஹூயெய் பிரதேசத்தின் உறுப்பினர்களாவும், அப்பிரதேசத்தை உருவாக்குப்பவர்களாகவும் நலன் பெறுவோராகவும் வெளி ஊரிலிருந்து வந்தோர் காணப்படுகின்றனர். இந்த சேவை மையம், வெளி ஊரிலிருந்து வந்தோர், சிங் ஹுயெய் பிரதேசத்தை வீடாக எண்ணச் செய்தது. இரண்டாவது, உள்ளூர் மக்கள் அனுபவிக்கும் உரிமைகள், வெளி ஊரிலிருந்து வந்தோருக்கும் உண்டு. மூன்றாவது, இந்த சேவை மையம், ஓராண்டின் இறுதியில், அன்பளிப்பு அளித்த பழக்க செயல்பாட்டை மாற்றி, முழு ஆண்டும், வெளி ஊரிலிருந்து வந்தோருக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் அன்பளிப்பு அளிக்கும் என்றார் அவர்.

இந்த சேவை மையம் நிறுவப்பட்ட 4 ஆண்டுகாலத்தில், அரசுக்கும் வெளி ஊரிலிருந்து வந்தோருக்கும் இடையே சீரான பரிமாற்ற மேடை உருவாக்கப்பட்டது. அதனால், வெளி ஊரிலிருந்து வந்தோர், அவர்களுக்கு கவனம் செலுத்தப்ப மதிப்பு அளிக்கப்படும் உணர்வை பெற்றுள்ளனர். இந்த பிரதேசத்தில் வாழ்வதை தாயகத்தில் வாழ்வது போன்ற உணர்வை அவர்கள் அடைந்தனர்.

14வயதான லியாங் யு யுங், அன் ஹுய் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர், நென் ச்சிங் நகரில் நூடல்ஸ் விற்பனை உணவகத்தை நடத்தி வருகின்றனர். குழந்தை காலத்தில், நூடல்ஸை தயார்க்கும் போது, வலது கை விரல் ஒன்று இயந்திரத்தால் அரைக்கப்பட்டதால், லியாங் யு யுங், பள்ளியில் துணிவு குறைந்த, அழகாக எழுத முடியாத மாணவராக திகழ்ந்தார். வெளி ஊரிலிருந்து வந்தோரின் குழந்தைகள் சேவை மையம் உருவாக்கப்பட்ட பிறகு, அவர் அந்த மையத்தின் நடவடிக்கைகளில் கலந்துகொண்டார். அதற்கு பிறகு, அவர் திறந்த மனத்தை செயல்பட்டார். நிறைய நண்பர்களுடன் பழகி, வெளிப்படை குணமுடையவராக மாறினார். நமது செய்தியாளர், இந்த சேவை மையத்தின் வகுப்பறையில் லியாங் யு யுங்கை சந்தித்த போது, அவர் தன்னார்வ ஆசிரியரின் உதவியில் சொற்களை எழுத பயிற்சி செய்து கொண்டிருந்தார். லியாங் யு யுங் கூறியதாவது—

நாள்தோறும், வகுப்பு முடிந்த பிறகு, இங்கு நூல்களை படித்து, சொற்களை எழுதி, கூடை பந்து விளையாடலாம். இங்கு நிறைய குழந்தைகள் இருக்கின்றனர். நாள்தோறும் நாங்கள் மகிழ்ச்சியாக பழகுகிறோம். நான் எழுதிய சொற்கள் படிப்படியாக அழகு அடைக்கின்றன. இங்குள்ள ஆசிரியர்கள் பொறுமையுள்ளவர்கள் என்றார் அவர்.

இப்போது லியாங் யு யுங் மென்மேலும் தன்னம்பிக்கை உடையவராக விளங்குகிறார். நென் ச்சிங் விமானப்பயணப் பல்கலைக்கழக்கத்தின் இடைநிலை பள்ளியில் சேர்ந்தார்.

4 ஆண்டு காலத்தில், இந்த சேவை மையம், இப்பிரதேசத்திலுள்ள 500க்கு மேற்பட்ட வெளி ஊரிலிருந்து வந்தோரின் குழந்தைகளுக்குத் தரமான சேவை புரிய முயற்சி செய்து வருகிறது. பல சாதனைகளையும் பெற்றுள்ளது. இந்த சேவை மையத்தின் தன்னார்வ தொண்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்த பிறகு, உள்ளூர் மக்களும் வெளி ஊரிலிருந்து வந்தோரும் ஒன்றுகூடி, வளர்ச்சி சாதனைகளை சமநிலையில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், வெளி ஊரிலிருந்து வந்தோர், நென் ச்சிங் நகரை உண்மையிலேயே சேர்ந்தவராகவே உள்ளனர்.

வெளி ஊரிலிருந்து வந்தோரின் குழந்தைகளுக்கு கவனம் செலுத்தி, தன்னார்வ தொண்டர்களை சேர்ப்பதென்ற, சியாங் சூ மாநிலத்தின் திட்டத்தை, சீனக்கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கின் சியாங் சூ மாநிலத்தின் துணை செயலாளர் சென் ஹெய் பின் விளக்கினார்.

மேலதிகமான தன்னார்வ தொண்டர்களை ஈர்த்து, அவர்கள், சேவைப் பணியில் கலந்துகொள்ளச் செய்வது, மிக முக்கியம் தான். வெளி ஊரிலிருந்து வந்தோரின் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். அன்றியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதற்கு பொருந்தியதாக, மேலதிகமான தன்னார்வ தொண்டர்கள் தேவை. அவர்களில் 2 முக்கிய குழுக்கள் இருக்கின்றன. ஒன்று உடல் நிலை சரியான முதியோர்கள். இரண்டு, பல்கலைகழக்க மாணவர்கள். அவர்கள், வெளி ஊரிலிருந்து வந்தோரின் குழந்தைகளின் நண்பர்களாக மாற்றுவர். இந்த வழிமுறையின் மூலம், மேலும் அதிகமான தன்னார்வ தொண்டர்களை ஈர்க்கலாம் என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040