• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு
  2011-11-09 16:11:13  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு, ஆசிய பசிபிக் பிரதேசத்தில் மிக அதிக செல்வாக்குள்ள அரசுகளுக்கிடை பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இவ்வமைப்பு 1989ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1989ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் Bob Honker தென்கொரியாவில் பயணம் மேற்கொண்ட போது, அமைச்சர்கள் நிலைக் கூட்டத்தை நடத்த முன்மொழிந்தார். 1989ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் முதல் 7ஆம் நாள் வரை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து மற்றும் 6 ஆசியான் நாடுகள், ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெராவில் முதன்முறையாக அமைச்சர்கள் நிலைக் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கத்தை இக்கூட்டம் உணர்த்தியது. இக்கூட்டமே பிறகு, ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாக உருவானது.

பொருளாதாரத்தின் உலகமயமாக்கப் போக்கில், தாராள வர்த்தகம், மூதலீடு, பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை நிறைவேற்றுவதில், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு, முனைப்பான பங்கை வகிக்கிறது. அத்துடன், இப்பிரதேசத்தில் ஒரு முக்கிய சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பாக அது மாறி வருகிறது. பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்பு, பிரேதசப் பாதுகாப்பு முதலியவற்றில் இவ்வமைப்பு மேலும் முக்கிய செல்வாக்கை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040