சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா 12ம் நாள் அமெரிக்காவின் ஹவாயில் சந்தித்துரையாடினர். சீன அமெரிக்க உறவு, பொது அக்கறைக்கொண்ட பிரதேசம் மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் ஆகியவை பற்றி இரு தரப்பினர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். நவம்பர் திங்கள் இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் சந்திப்பு நடத்துவது இதுவே 2வது முறையாகும்.