பாகிஸ்தானின் அரசுத் தலைவர் ஆசிஃப அலி சர்தாரி: சீன வானொலி நிலையத்தின் தரமான சிறப்புக் கட்டுரைகள் மற்றும் நிகழ்ச்சிகள், பல்வேறு நாடுகளுக்கிடையே தொடர்பை வலுப்படுத்தக்கடியவை. சீன-பாகிஸ்தான் இடை நட்புறவுக்கு சீன வானொலி முக்கிய பங்காற்றுகின்றது. சீன வானொலி நிலையத்தின் மேலும் அருமையான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள் என்று தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டார்.
சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் இலங்கை தலைமையமைச்சர் D.M ஜெயரட்னே கடிதத்தை அனுப்பியது. இக்கடிதத்தில், சீன வானொலி நிலையம் பல மொழிகள் மற்றும் பல்லூடக வழிமுறையில், உலகத்துக்கு சீனைவை அறிமுகம் செய்து, சீனாவுக்கு உலகத்தை அறிமுகம் செய்வது என்ற கருத்தில், உலகத்துக்கு காலதாமதமன்றி உள்ளபடியாகச் சீனாவைச் செய்தி வெளியிட்டு, முழுமையான சீனாவை அறிமுகப்படுத்துகிறது. சீனாவுக்கும் உலக மக்களுக்குமிடையே புரிந்துணர்வு மற்றும் நட்பை முன்னேற்றுவதுக்கு மதிப்புள்ள பங்காற்றுகிறது பாராட்டுககள் என்று டி எம் ஜெயரட்னே தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் அரசுத் தலைவர் ஹமித் கர்சாய்: சீன வானொலி நிலையத்தின் 70ம் ஆண்டு நிறைவை யோடி, பணியாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, பணிகளில் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்தினார்.