தற்போதைய எண்ணியல் காலத்தில் இணையச் சொத்து ஒரு புதிய கருத்தாக மக்களிடையில் பரவலாக பரவி வருகின்றது. வாழ்க்கையில் புதிதாக தோன்றிய தனிநபர் இணையம், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், சமூக வலைப்பின்னல், இணைய நிழற்படப் படைப்பு, இணைய ஒளிப்படப் படைப்பு முதலியவற்றுடன் நாம் எண்ணியல் வடிவத்தில் வாழ்க்கையை பதிவுச் செய்யும் முதலாவது தலைமுறை மனிதராக மாறியுள்ளோம். புதிதாக பரவலாகிய மலிவான கிளவுட் பதிவு எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் பற்றிய தகவல்களின் ஆயுள் அவருடைய உண்மை ஆயுளை விட மிகமிக அதிகம். ஏன், அவை என்றுமே நிலைத்திருக்கவும் கூடும் என்று சொல்லலாம்.
இணையத்தின் பெயர், இணையப் பயன்பாட்டாளர்களின் பதிவுப் பெயர் முதலியவை உயர் விலையில் விற்பனை செய்யப்படலாம். ஒளிப்படப் பதிவுகள் விளம்பரத்துடன் ஒளிபரப்பப்படுகின்றன. குறிப்பாக, ஆன்ட்ரோபியா உலக எனும் இணைய விளையாட்டுகளில் ஒரு மெய்நிகர் சர்வதேச விண்வெளி நிலையம் 3 இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு, கின்னஸ் சாதனை பதிவாகியுள்ளது. தற்போது, மென்மேலும் அதிகமான மக்கள் இணைய வணிகப் பொருட்களின் பயன் மற்றும் மதிப்பை அறிந்துகொண்டு வருகின்றனர். மேலும், எண்ணியல் பாரம்பரியம், காலமானவர்களின் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவுள்ளன. முன்னோடிகள் பற்றி அறிந்து கொள்ளும் ஒரே நேரடி வழிமுறையாகவும் இது மாறுவது திண்ணம்.
பிரிட்டனில் இணையம் வழி எண்ணியல் பாரம்பரியம் தொடர்பான ஒரு பொது மக்கள் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. உயில் எழுதும் போது தமது எண்ணியல் சொத்தின் பகிர்வும் சேர வேண்டும் என்று பலர் முடிவு செய்துள்ளதாக இந்தக் கருத்து கணிப்பின் முடிவு காட்டுகின்றது. லண்டன் பல்கலைக்கழகத்தின் கின்ஸ்மீஸ் கழகத்தின் ஆய்வாளர்களும், Rackspace எனும் இணைய நிறுவனத்துடன் ஒத்துழைத்து நடுத்தர வயதுடைய 2000 பேரிடம் இந்தக் கருத்து கணிப்பை மேற்கொண்டனர். அவர்களில் நான்கில் ஒரு பகுதி மக்கள் இணையத்தில் 200 பவுண்ட் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். இதன் படி மதிப்பிட்டால், அனைத்து பிரிட்டன் மக்களின் இணையச் சொத்துக்களின் மதிப்பு 230 கோடி பவுண்ட்டைத் தாண்டக் கூடும்.
இணையச் சொத்துக்களில் ஒரு பகுதியாக, தனிநபர் நிழற்படங்களும் ஒளிப்படப் பதிவுகளும் இடம்பெறுகின்றன. ஒரு பகுதி குறிப்பிட்ட செலவில் வாங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, இணைய இசை, இணைய விளையாட்டு வசதிகள். ஆகையால், மிகப்பல மக்கள் சொந்த இணையச் சொத்துக்களை பேணிமதிக்கின்றனர்.
கருத்துக் கணிப்பின் முடிவுப் படி, 53 விழுக்காட்டினர் இணையச் சொத்துக்களில் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். 11 விழுக்காட்டினர், இணைய கணக்கின் நுழைவுச் சொல் உள்ளிட்ட இணையச் சொத்துக்களுடன் தொடர்பான தகவல்களை ஏற்கனவே உயிலில் எழுதியுள்ளனர் அல்லது எழுதவுள்ளனர்.
எண்ணியல் தொழில் நுட்பங்களின் விரைவான பரவல், மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல தொடர்புடைய சட்டவிதி, ஒழுக்க நெறி முதலிய துறைகளிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பதிவு செய்தவர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் மட்டுமல்ல, எண்ணியல் சொத்துகள் இணையச் சேவை நிறுவனங்களுடனும் தொடர்புடையவை. இது தான் இப்பிரச்சினையின் சிக்கலானப் பகுதியாகும். 2010ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் சிலிக்கான் கிராமம் எண்ணியலின் மரண நாள் எனும் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தத் துவங்கியது. இக்கூட்டத்தில் எண்ணியல் சொத்துகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. மரணத்தை உறுதிப்படுத்துவது என்ற ஒழுங்கில் பங்கெடுக்க பல்வேறு இணையச் சேவை நிறுவனங்கள் விரும்பவில்லை என்று கூட்டத்தில் எட்டியுள்ள ஒத்த கருத்து காட்டுகிறது. மேலும் தொடர்புடைய சட்டவிதிகள் மிகவும் குறைவாகவே இருப்பதால், எண்ணியல் மரபுச் செல்வங்களின் கையேற்றல் அல்லது அகற்றல் பற்றிய ஒரு குறிப்பிட்ட வரையறை இதுவரை வகுக்கப்படவில்லை.
தற்போது கூறப்படும் எண்ணியல் சொத்துத் திட்டம், இணையத் துறையில் ஒரு புதிய பகுதியாக மாறியுள்ளது. இத்திட்டத்தில் பல்வகை சேவைகள் ஏற்கனவே துவங்கியுள்ளன.
அமெரிக்காவில் எண்ணியல் சொத்துப் பாதுகாப்புப் பெட்டகம் என்ற இணையம் உள்ளது. பயன்படுத்துவோர் பல்வேறு கணக்குகளையும் ரகசிய குறியீட்டு எண்களையும் இந்த இணையத்தில் பதிவு செய்து, குறிப்பிட்ட கையாளும் நபரை உறுதிப்படுத்தலாம். பயன்படுத்துவோர் மரணமடைந்த பின், இந்த இணையம் தொடர்புடைய தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட கையாளும் நபருக்கு அனுப்பும்.
வேறு யாரிடம் காட்ட முடியாத இணையப் பகுதிகளை நேரடியாக அகற்றலாம். சில வேளைகளில் அவற்றுக்கு குறிப்பிட்ட பயன் காலத்தை வகுப்பதும் நல்லது. ஜெர்மனியின் X-Pire நிறுவனம் ஒரு மென்பொருள் வசதியை வெளியிட்டது. அதனைப் பயன்படுத்தினால், இணையத்தில் சேர்க்கப்பட்ட நிழற்படங்கள் நீங்கள் உறுதிப்படுத்திய பயன் காலத்துக்குப் பின், தாமாகவே அகற்றப்படலாம்.
அடுத்த தலைமுறைக்கு சீரான எண்ணியல் தோற்றத்தைக் காட்ட வேண்டுமானால், இணையத்தில் சொந்த செயல்பாட்டையும் கூற்றையும் கவனிக்க வேண்டும் என்று வல்லுனர்கள் குறிப்பிட்டனர்.