காற்று மாசுபாடும் புதிதாக பிறந்த குழைந்தையின் எடையும்
காற்றில் கரியமில வாயு மாசுபாடு, கர்ப்பிணி பெண்களின் வயிற்றிலுள்ள குழந்தைகளையும் பாதிக்கும் என்று ஜெர்மனி ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
ஜெர்மனி பொருளாதார ஆய்வகத்தைச் சேர்ந்த சமூகம் மற்றும் பொருளாதார ஆணையத்தின் வல்லுனர்கள் ஒரு தகவல் தொகுப்பை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுத்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள் காற்றில் அதிக கரியமில வாயு நிலவும் சூழலில் நீண்டகாலமாக வாழ்ந்தால், பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை குறைவாக இருக்கும். பொதுவாக, புதிதாக பிறந்த இதர குழைந்தைகளை விட அவர்களது உடல் எடை 289 கிராம் குறையும். போக்குவரத்து நிலைமை மோசமான இடத்தில் காற்றில் அதிக கரியமில வாயு இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
கடும் கரியமில வாயு மாசுபாடு இருக்கும் சூழலில் கர்ப்பிணிகளின் உடலில் ரத்தத்தின் ஆக்சிஜன் எனும் உயிர் வாயு அளவு குறையும். ஆகவே கருவிலுள்ள குழந்தைகள் சீராக வளர முடியாத நிலையில் சிக்கிக் கொள்ளும்.