ரஸ்-M ஏவூர்தி ஆய்வு பற்றிய திட்டத்தை ரஷிய அரசு கைவிட்டுள்ளதாக ரஷிய விண்வெளி துறை (FSA) தலைவர் விளாடிமிர் போபோப்கின் அக்டோபர் 7ம் நாள் ரஷிய நாடாளுமன்றத்தின் கீழவையில் உரை நிகழ்த்துகையில் கூறினார்.
முன்பு வகுத்த திட்டப் படி, அடுத்த 4 ஆண்டுகளில் ரஷிய விண்வெளி துறையின் வரவு செலவுத் திட்டத்தின் 37 விழுக்காட்டுத் தொகை இந்த ஆய்வில் ஒதுக்கப்படும். ஆனால், இந்தத் தொகை ஆய்வுத் திட்டத்தின் சுமூக நடைமுறையாக்கத்துக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அவர் கூறினார்.
தற்போது, பயன்படுத்தப்படும் சோயுஸ், புரோட்டான் மற்றும் 2013ம் ஆண்டில் முதன்முதலாக விண்ணில் செலுத்தப்படும் அன்காரா ஏவூர்தி, அடுத்த 4 ஆண்டுகளில் தேவைப்படும் ஏவும் கடமைகளை நிறைவேற்றலாம் என்று போபோப்கின் சுட்டிக்காட்டினார். தொடர்புடைய உடன்படிக்கைகளின் படி, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகளை அனுப்பும் கடமையை ரஷியா நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார்.
2015ம் ஆண்டு வாக்கில் சோயுஸ் தொகுதி ஏவூர்திகளுக்குப் பதிலாக ரஸ்–M ஏவூர்திகள் பயன்படுத்த ரஷியா திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.