டைனசோர், நெடுங்காலத்துக்கு முன் புவியில் வாழ்ந்து மறைந்த போன) பெரும் உடல் கொண்ட விலங்காகும். சில வகை பறவைகளைப் போல், அவை பருவகாலத்தின் படி இடம்பெயர்ந்தன என்று அண்மையில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இயற்கை எனும் பிரிட்டன் இதழின் இணையத்தில் இது பற்றிய ஒரு கட்டுரை அண்மையில் வெளியிடப்பட்டது.
டைனசோர் உள்ளிட்ட முதுகெலும்புடைய விலங்குகளின் பற்களில், அவை வசித்த பிரதேசத்தில் அப்போதைய Oxygen ஓரிடமூலக விகிதத்தின் தனிச்சிறப்பு வெளிப்படுத்தப்படும். அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் Sauropod டைனசோர்களின் படிம பற்களின் மீது ஆய்வு மேற்கொண்டனர். இந்த வகை டைனசோர்கள் பருவகாலத்தின் படி இடம்பெயரக் கூடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த டைனசோர்கள் அடிக்கடி வளமான வண்டல் சமவெளியில் உணவுப் பொருட்களைத் தேடிப்பார்த்தன. வண்டல் சமவெளி பருவகால வறட்சியால் பாதிக்கப்பட்ட போது அவை உயர் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தன. வறட்சி காலத்துக்குப் பின் அவை மீண்டும் சமவெளிக்குத் திரும்பின என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டனர்.
Sauropod டைனசோர்கள் புவியில் வாழ்ந்திருந்த மிகப் பெரிய முதுகெலும்புடைய நிலம்வாழ் விலங்குகளில் ஒன்றாகும். அவற்றின் படிமத்தின் படி அவற்றின் உடல் நீளம் 30 மீட்டராகவும், உடல் எடை நூறு டன்னாகவும் இருக்கக் கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.