பிரிட்டனின் ராயல் சங்கம் அக்டோபர் 26ம் நாள் முதல் தனது வரலாற்றுப் பொருட்காட்சியகத்தை இணையத்தில் இலவசமாக பொது மக்களுக்கு திறக்கும். ஆகவே, நியூட்டனின் முதலாவது அறிவியல் தாள் கட்டுரை, இளம் டார்வின் மேற்கொண்ட நிலவியல் ஆய்வு, மின்னாற்றல் கடத்துவது பற்றிய பிராங்க்ளினின் புகழ்பெற்ற பருந்து ஆய்வு முதலிய அரிய அறிவியல் ஆவணங்களை தற்போது, இணையம் மூலம் பொது மக்கள் இலவசமாக பார்க்கலாம்.
பிரிட்டன் ராயல் சங்கம் உலகில் மிகப் புகழ்பெற்ற மிக நீண்ட வரலாறுடைய அறிவியல் அமைப்புகளில் ஒன்றாகும். 1665ம் ஆண்டு அது ராயல் சங்கத்தின் தத்துவயியல் இதழை முதன்முதலாக வெளியிட்டது. சகத் துறையினர்களின் விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்ட மிக பழைய இதழாக இது கருதப்படுகிறது. தற்போது ஆய்வாளர்கள் விமர்சனக் கட்டுரைகளை அதிகாரப்பூர்வ கல்வி இதழ்களில் வெளியிடுவதற்கு அடிப்படையாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் சங்கத்தின் தத்துவயியல் இதழ் இது வரை 2 பகுதிகளாக தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
இவ்விதழில் தான் நியூட்டன் தனது முதலாவது அறிவியல் தாள் கட்டுரையை வெளியிட்டார்.
மேற்கூறிய புகழ்பெற்ற ஆவணங்களோடு மொத்தம் சுமார் 60 ஆயிரம் வரலாற்று அறிவியல் ஆவணங்களும் இணையத்தில் பொது மக்களால் இலவசமாக பார்க்கப்படலாம்.
கடந்த சில நூற்றாண்டுகளில் நவீன அறிவியல் துறை எப்படி வளர்ந்தது என்றறிய ஆர்வம் கொண்டவர்களைப் பொருத்த வரை, இந்த ஆவணங்கள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.