இன்று காணப்படுகின்ற சீனப் பெருஞ்சுவர், சான் குவோ காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் கட்டியமைக்கப்பட்ட அடிப்படையில், மிங் வம்சம் இடைவிடாமல் மேம்படுத்திய பெருஞ்சுவராகும். கிழக்கில் போஹாய் கடலிலிருந்து மேற்கில் கான் சூ பாலைவனம் வரை நீடிக்கும் 6 ஆயிரத்து 3 நூறு கிலோமீட்டர் நீளமுடைய பிரம்மாண்டமான தற்காப்பு முறைமையாக அது மாறியுள்ளது. உலகின் இரும்புக் காலத்தில் கட்டியமைக்கப்பட்ட மிக நீளமான, திட்டப்பணி எண்ணிக்கையில் மிக அதிகமான தேசிய இராணுவ தற்காப்புப் பணித்திட்டமாகப் பெருஞ்சுவர் திகழ்கிறது. அது, மூதாதையர்களின் வியர்வையையும் விவேகத்தையும் நிறைந்து உருவாகப்பட்ட சீனத் தேசிய இனத்தின் சின்னமும் சாதனையும் ஆகும்.