அரண்மனை அருங்காட்சியகம், இதன் முன்னாள் பெயர் தடுக்கப்பட்ட நகரம் என்பதாகும். மிங் மற்றும் சிங் வம்சங்களின் மன்னர் அரண்மனையாக இது விளங்குகிறது. உலகில் முழுமையாகப் பேணிக்காக்கப்படுவரும் மிகப் பெரிய பண்டைக்கால மன்னர்களின் அரண்மனைக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று ஆகும். நிலப்பரப்பு 7லட்சத்து 20 ஆயிரம் சதூர மீட்டருக்கும் அதிகமாகும். இதில் 8700 அறைகள் உள்ளன. சுமார் 10 மீட்டர் உயரமுள்ள சுவரும் 52 மீட்டர் அகலம் கொண்ட நகரைப் பாதுகாப்புக்கும் ஆறும், இந்த அரண்மனையைச் சுற்றி அமைந்துள்ளன கின்றன. சீனாவின் பண்டைக்காலக் கட்டிடக் கலையின் மிக உன்னதமான சாதனைகளை அரண்மனை அருங்காட்சியகம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
கட்டிடத் தொகுதிகளின் தட்டுமுட்டு முழுமையின் மூலம், சீனாவின் பண்டைக்காலக் கட்டிடங்களின் கம்பீரமும் அழகும் வெளிப்படுத்தப்படுகின்றன. அரண் மனை அருங்காட்சியகத்தின் சுமார் ஆயிரம் கட்டிடங்கள், நூற்றுக்கு மேலான தோட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த சிறப்பு, சீன அரண்மனைக் கட்டிடங்களின் பாரம்பரியத்தையும், மிக முக்கியமான எழுச்சியையும் வெளிக்கொணர்கிறது. அதே வேளையில், அரண் மனை அருங்காட்சியகம், லட்சக்கணக்கான தொல் பொருட்களைச் சேமித்து வைக்கும் பெரிய களஞ்சியமாகவும் திகழ்கிறது.