பீக்கிங் மனிதன் என்னும் மனிதகுலத்தின் ஆதி வரலாற்றுப் புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பாங்சான் மாவட்டத்தின் ஷோகோதியென் நகரிலுள்ள லோன்கு மலை, உலகளவில் புகழ் பெற்ற மனிதகுலம் மிகவும் முன்னதாகத் தோன்றிய இடமாக மாறியுள்ளது. இதுவரை, அங்கு, 50லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் 10ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த விலங்குகளின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் 7லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதகுலச் செயல்பாட்டுச் சிதிலங்களைச் சேமித்து வரும் ஒரே இடம் இதுவாகும்.