யூங் திங் மென் உள் வீதியில் அமைந்திருக்கும் சொர்க்கக் கோயில், மிங் ச்சிங் வம்சத்தின் மன்னர்கள் தெய்வத்தை வழிபட்டு, அமோக அறுவடை பெறப் இறைவேண்டல் செய்த இடமாகும். அது 27இலட்சத்து 30ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவுடையது. தியென் தான் கோயில், சீனாவில் மிக முக்கியமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் வழிபாட்டுக் கட்டிடங்களில் ஒன்றாகவும், உலகில் மிகப் பெரிய வழிபாட்டுக் கட்டிடங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. உன்னதமும் சிறப்பும் வாய்ந்த சீனக் கட்டிடக் கலையையும், வழிபாட்டுப் பயன்பாடு, பொருள்பொதிந்த அடையாளங்கள் ஆகியவற்றையும், தியென் தான் கோயில் கட்டிடங்கள் இணக்கமாக ஒன்றிணைத்துள்ளன. சிறப்புடைய கட்டிடக் கலை சிந்தனை, நுட்பமான கட்டிடக் கண்ணோட்டம் முதலியவற்றில் ஆழமான சீனத் தேசிய பாரம்பரியப் பண்பாட்டின் அம்சங்கள் அடங்குகின்றன.