மிங் வம்சக் கல்லறைகள் பெய்ஜிங் நகரில் சாண் பிங் மாவட்டத்தின் வட பகுதிலுள்ள தியான் சொ மலையில் அமைந்துள்ளன. மிங் வம்சத்துக்குப் பின், தலைநகர் பெய்ஜிங்க்கு மாற்றப்பட்டது. மிங் வம்சக் கல்லறைகள் 13 சீனப் பேரரசர்கள் மற்றும் அவர்களது மனவியர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளாகும். அவற்றின் பரப்பளவு 80க்கு மேலான சதுர கிலோமீட்டரைக் கொண்டது. மிங் வம்சக் கல்லறைகள், சீனாவின் பண்டைகால அரசப் பரம்பரைக் கல்லறைகளின் தொகுதி. ஃபெங்ஸய் எனும் வாஸ்து சாத்திரம், கட்டிடக்கலை அழகியல், தத்துவயியல், மத அமைப்பு முறை ஆகியவை சீனப் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களின் உள்ளடக்கங்களைக் காட்டுகின்றன.