பிப்ரவரி திங்கள் 3ம் நாள், ஜப்பான், தென்கொரியா, நேபாளம், பாகிஸ்தான், இந்தியா முதலிய நாடுகளிலிருந்து வந்த நண்பர்கள், மத்தியத் தொலைக்காட்சிக் கோபுரத்தில் சீனப் பயணிகளுடன் இணைந்திருந்து சீனாவின் பாரம்பரிய விளக்கு விழாக் கொண்டாட்டத்தை நேரில் அறிந்து கொண்டனர்.
இந்த நடவடிக்கையில் கலந்து கொண்ட வெளிநாட்டு நண்பர்கள், சீன வானொலி நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். சீனாவில் விளக்கு விழாவைக் கொண்டாடுவது மிக சிறப்பாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.