2011ம் ஆண்டில் சீன மற்றும் சர்வதேச அறிவியல் தொழில் நுட்பத் துறையில் 10 முக்கியச் செய்திகள் டிசம்பர் 29ம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. சீன அறிவியல் கழக மற்றும் சீனப் பொறியியல் கழகத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், சீனாவின் முக்கியச் செய்தி ஊடகங்களின் தலைவர்கள், மூத்த அறிவியல் தொழில் நுட்பச் செய்தியாளர்கள், பெரிய செய்தி இணையங்களின் தலைமை பதிப்பாசிரியர்கள் ஆகியோர் இத்தேர்வில் கலந்து கொண்டனர்.
முதலில், நிகழ்வுகளின் நேரப்படி, 2011ம் ஆண்டில் சீனாவின் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் 10 முக்கியச் செய்திகள்.
1. சீன மக்கள் விடுதலை படையின் 4வது தலைமுறை ஸ்டேல்த் போர் விமானம் – Jian 20வின் முதல் பரிசோதனை பறத்தல், 2011ம் ஆண்டு ஜனவரி திங்கள் 11ம் நாள் செங்துவில் வெற்றிகரமாக நடைபெற்றது. சீன விண்வெளிப் பயணத் துறையின் மாபெரும் முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.
2. அறிவியல் தொழில் நுட்பத் துறையில் மோசடி செயல்களைத் தடுத்துத் தண்டனை வழங்கும் வகையில், சி ஆன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஒருவர் 2005ம் ஆண்டு பெற்ற 2ம் தேசிய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றப் பரிசு நீக்கப்பட்டுள்ளது.
3. 2011ம் ஆண்டு பெய் தாவ் எனும் வழிகாட்டல் தொகுதியைச் சேர்ந்த 3 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. சீனாவின் முதலாவது வழிகாட்டல் செயற்கைக்கோள் தொகுதி அதிகாரப்பூர்வமாக ஆய்வு முறையில் சேவை புரிய துவங்கியுள்ளது.
4. திட உயிரணுக்களை கல்லீரல் மாற்றியமைக்க முடியும் என்பதை சீன அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர்.
5. சீனாவின் முதலாவது விரைவு நியூட்ரான் உலை ஆய்வு வெற்றிகரமாக நடைபெற்று மின்சாரத்தை உற்பத்தி செய்யத் துவங்கியது.
6. சீனா வடிவமைத்த ச்சியாவ் லுங் எனும் ஆட்களை ஏற்றிச் செல்லும் நீர்மூழ்கிக் கலம் கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் ஆழத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டது.
7. ஆகஸ்ட் 30ம் நாள், Chang E 2 என்னும் சீனாவின் இரண்டாவது சந்திர மண்டல ஆய்வு செயற்கைக் கோள், L2 Lagrangian முனையைச் சென்றடைந்தது. சந்தினுக்கு மேலும் தொலைவிலுள்ள புறஅண்ட வெளியில் சீனா ஆய்வு மேற்கொள்ளத் துவங்கியது.
8. மலேரியா நோயை எதிர்க்கும் அர்டீனியும் என்ற மருந்தை கண்டு பிடித்த சீனாவின் பெண் அறிவியலாளர் தூ யுயு சர்வதேச மருத்துவ விருதான அமெரிக்காவின் லாஸ்கெர் மருத்துவ ஆய்வு விருதைப் பெற்றுள்ளார்.
9. சீனாவின் தியென்குங்-1 விண்வெளி கலமும் சென்சோ-8 விண்கலமும் விண்ணில் வெற்றிகரமாக இணைந்துள்ளன.
10. சீன அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் எய்ட் போஃட்டான் என்டாங்கில்மெண்ட் ஆய்வில் வெற்றி பெற்று உலக சாதனையை புதுப்பித்துள்ளது.
அடுத்து, உலகில் மிகப் பெரிய 10 அறிவியல் தொழில் நுட்பச் செய்திகள்
1. ஜப்பானின் புஃகுசிமா அணு மின் நிலையத்தில் அணுக் கசிவுச் சம்பவம் நிகழ்ந்தது.
2. மனித நரம்பு மருந்து ஆய்வில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. இதன் விளைவாக அல்சைமர் நோய், பார்கின்சன் நோய் ஆகியவற்றுக்கான சிகிச்சை புதிய கட்டத்தில் நுழையும்.
3. அற்றை அணு குவான்டாவில் தகவல் சேரமிப்பு முதன்முதலாக நனவாக்கப்பட்டது. குவாண்டம் கணினியின் திறன் அதனால் பெரிதும் அதிகரிக்கும்.
4. சார்பியல் தொடர்பான பொதுவான கோட்பாடு குறித்த 2 ஊகங்கள் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டன.
5. முதலாவது தனி போஃட்டான் திசைவி தயாரிக்கப்பட்டது. அது குவாண்டம் இணையத்தின் முக்கிய வசதியாகப் பயன்படுத்தப்படும்.
6. நியூட்ரினோவின் சூப்பர்லூமினல் நிலைமை கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐயின்ஸ்டைனின் சார்பியல் கருத்து அறைகூவலை எதிர்நோக்குகிறது.
7. தியென்குங்-1 விண்வெளி கலமும் சென்சோ-8 விண்கலமும் விண்ணில் வெற்றிகரமாக இணைந்துள்ளன. சீனாவின் விண்வெளி ஆய்வுத் தொழில் நுட்பம் முன்னேறி வருகிறது.
8. வலிமைமிக்க ஒளி உறிஞ்சுதல் பொருளின் உறிஞ்சுத் திறன் 99 விழுக்காட்டை எட்டியுள்ளது. அதனைப் பயன்படுத்தி புதிய விண்கலத்தின் மேல் பூச்சுச் செய்யலாம்.
9. ஸ்டெம் உயிரணு செயற்கை இரத்தம் முதன் முதலாக மனித உடலில் செலுத்தப்பட்டது. அதன் விளைவு உண்மையான இரத்தம் செலுத்தலுக்கு இணையாக உள்ளது.
10. மனித வாழ்க்கைக்கு உகந்த தட்பவெப்பம் கொண்ட புவியைப் போன்ற கிரகத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது. அதன் மேல்பகுதியில் கற்களும் நீரும் இருக்கக் கூடும்.