• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல்:சீனாவின் செயற்கைக் கோள் வழிகாட்டல் தொகுதி ஆய்வு
  2012-02-20 11:27:08  cri எழுத்தின் அளவு:  A A A   

நண்பர்களே தற்போது, உலகில் 4 பெரிய செயற்கைக் கோள் வழிகாட்டல் தொகுதிகள் உள்ளன. அமெரிக்காவின் GPS, ரஷியாவின் GLONASS, ஐரோப்பிய ஒன்றியத்தின் Galileo, சீனாவின் பெய் தோ ஆகியவையே இந்த 4 புவியிடங்காட்டிச் சேவை தொகுதிகள். உலக செயற்கை வழிகாட்டல் தொகுதிகள் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான இன்றையிமையாத விண்வெளி தகவல்களை வழங்குகின்ற அடிப்படை வசதிகளாக மாறியுள்ளன என்று சீன பெய் தோ செயற்கை வழிகாட்டல் தொகுதித் திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளரும் சீனப் பொறியியல் கழகத்தின் உறுப்பினருமான Sun jia dong சுட்டிக்காட்டினார். மே திங்கள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற 2வது சீன செயற்கைக் கோள் வழிகாட்டல் கல்வியல் ஆண்டு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நவீன சமூக வாழ்க்கை மற்றும் உற்பத்தித் துறையில் இடம் காட்டும் சேவைக்கான பரந்த மாற்றம் மிக்க தேவைகளை நிறைவேற்ற, முழு உலகச் செயற்கைக் கோள் வழிகாட்டல் தொகுதிக் கட்டுமானத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. இத்துறையில் ஈடுபட்ட அறிவியலாளர்கள் புதிய அறிவியல் தொழில் நுட்பங்களைக் கண்டறிவது, புதிய சேவைகளை உருவாக்குவது, எதிர்காலத்தை வரவேற்பது முதலிய பொறுப்புகளை ஏற்க வேண்டியவராக உள்ளனர் என்று Sun jia dong கூறினார்.

சீனாவின் பெய் தோ செயற்கைக் கோள் வழிகாட்டல் தொகுதித் திட்டப்பணி 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலாவது கட்டம், 2003ஆம் ஆண்டு 3 செயற்கைக் கோள்களால் ஆய்வு வழிகாட்டல் தொகுதி ஒன்று உருவாக்கப்பட்டது. இரண்டாவது கட்டம், 2012ம் ஆண்டு அளவில், 10க்கு மேற்பட்ட செயற்கைக் கோள்களால் பெய் தோ மண்டல வழிகாட்டல் தொகுதி உருவாக்கப்படும். மூன்றாவது கட்டம், 2020ம் ஆண்டுக்குள், பெய் தோ வழிகாட்டல் தொகுதியில் 30க்கு மேற்பட்ட செயற்கைக் கோள்கள் சேர்க்கப்பட்டு முழுமையடையும் என்று தெரிகிறது.

இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள் 8வது பெய் தோ வழிகாட்டல் செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. சோதனை செயல்பாடுகளில் வெற்றி பெற்ற பின், இந்தப் பெய் தோ வழிகாட்டல் தொகுதி சீனாவின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு அடிப்படைச் சேவை புரியத் துவங்கலாம். அமெரிக்கா, ரஷியா ஆகிவற்றுக்கு அடுத்து உலகில் 3வது சொந்த செயற்கைக் கோள் வழிகாட்டல் திறனுடைய நாடாக சீனா மாறியுள்ளதை இது காட்டுகிறது.

இந்தத் தொகுதி முழுமைப்படுத்தப்பட்ட பின், முழு உலகிற்கும் இலவசமான, உயர் தரமான நம்பத்தக்க சேவை வழங்கப்படும் என்று சீனச் செயற்கைக் கோள் வழிகாட்டல் தொகுதி மேலாண்மை அலுவலகத்தின் தலைவர் Ran cheng qi தெரிவித்தார். பயன்பாட்டுத் துறையில், பெய் தோ தொகுதியை மையமாகக் கொண்ட இடம்காட்டும் சேவை தொழிலை சீனா ஆக்கப்பூர்வமாக முன்னேற்றும். முக்கிய தொழில் நுட்பத் துறையில், உற்பத்தி, கல்வியியல், ஆய்வு, பயன்பாடு ஆகியவை படைத்த முழு தொகுதியை உருவாக்கி, அடிப்படை கல்வி ஆய்வு மற்றும் கல்வியியல் துறையில் பரிமாற்றங்களை சீனா மேலும் வலுப்படுத்தும், சர்வதேச ஒத்துழைப்புத் துறையில், பெய் தோ தொகுதியை இதர சர்வதேச உலக செயற்கைக் கோள் வழிகாட்டல் தொகுதிகளுடன் ஒத்து இயங்க செய்ய செயலாக்க முறையை விரைவுப்படுத்தி, பயணியர் விமானச் சேவை, கடல் அலுவலகம் முதலிய சர்வதேச வரையறை தொகுதிகளில் சேர சீனா பாடுபடும் என்று Ran cheng qi தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040