சீன அறிவியல் கழகத்தின் சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு விருது ஜனவரி 18ம் நாள் பெய்ஜிங்கில் வழங்கப்பட்டது. டென்மார்க் ஓஹுஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிஃலைமின் பெசண்பாஹ், அமெரிக்க ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லாண்னி டோம்சன், ஜப்பானின் உயர் ஆற்றல் துரிதமாக்கு வசதி ஆய்வு அமைப்பின் முனைவர் குரோகாவா ஷினிச்சி ஆகிய 3 பேர் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
பேராசிரியர் பிஃலைமின் பெசண்பாஹ் சர்வதேசப் பொறியியல் துறையிலும் நானோ அறிவியல் துறையிலும் மிக உயர்ந்த புகழ் பெற்றவர். முதுகலை மாணவர்களின் மேம்பாடு பற்றிய சீன-டென்மார்க் கூட்டுத் திட்டம், நானோ அறிவியல் தொழில் நுட்ப ஆய்வில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு முதலியவற்றில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். பேராசிரியர் லாண்னி டோம்சன் சீன அறிவியல் கழகத்தின் சிங்காய்-திபெத் பீடபூமி ஆய்வகத்தால் பரிந்துரை செய்யபட்டவர் ஆவார். அவர் உலகில் மிகவும் புகழ்பெற்ற பனிமலை சூழல் ஆய்வாளராக விளங்குபவர் ஆவார். 1984ம் ஆண்டு தொட்டு, அவர் சீன அறிவியலாளர்களுடன் ஒத்துழைக்கத் துவங்கினார். முனைவர் குரோகாவா ஷினிச்சி சீன அறிவியல் கழகத்தின் உயர் ஆற்றல் இயல்பியல் ஆய்வகத்தால் பரிந்துரை செய்யபட்டவர். உலக துகள் துரிதமாக்குதல் வசதி ஆய்வுத் துறையில் அவர் புகழ்பெற்றவராவார். ஜப்பான் மற்றும் சீனாவின் அறிவியல் தொழில் நுட்பத் துறை ஒத்துழைப்பை அவர் மும்முரமாக விரைவுபடுத்தி, சீன அறிவியல் கழகத்தின் வசதிக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்புத் துறையில் முக்கிய பங்காற்றிய சிறந்த வெளிநாட்டு அறிவியல் தொழில் நுட்ப மற்றும் மேலாண்மை வல்லுனர்களைப் பாராட்டி, சர்வதேச அறிவியல் தொழில் நுட்பத் துறை ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றும் வகையில், சீன அறிவியல் கழகம் 2007ம் ஆண்டு இவ்விருதை நிறுவியது. இதுவரை 14 வெளிநாட்டு வல்லுனர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
சீன அறிவியல் கழகத்தின் தலைசிறந்த அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றப் பரிசும் அதேநாள் வழங்கப்பட்டது.
இசை
புதிய விளையாட்டுப் பொம்மை
நுண்மதி நுட்ப செல்லிடப்பேசி, டேப்லெட் கணினி ஆகியவை மிகப் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது விளையாட்டுப் பொம்மை உற்பத்தி வணிகர்களும் இத்துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 58வது பிரிட்டன் விளையாட்டுப் பொம்மைகள் கண்காட்சி ஜனவரி 24 முதல் 26ம் நாள் வரை லண்டனில் நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட பல புதிய விளையாட்டுப் பொம்மைகளில் பயன்பாட்டு நிரல்களைப் பயன்படுத்தும் புதிய வகைகள் பல அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆகையால், இவ்வாண்டில் தலைசிறந்த பயன்பாட்டு நிரல்க வகை விளையாட்டுப் பொம்மைக்கான பரிசு ஒன்று சிறப்பான முறையில் உறுவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விளையாட்டுப் பொம்மைகள் பொதுவாக நுண்மதி நுட்ப செல்லிடப்பேசி அல்லது டேப்லெட் கணினிகளுடன் தொடர்புடையவை. விற்பனை வணிகர்கள் பயன்பாட்டாளருக்கு பயன்பாட்டு நிரல்களை இலவசமாக வினியோகிக்கின்றனர். எடுத்துக்காட்டாக சதுரங்க ஆட்டத்தில் பாரம்பரிய திரைக்குப் பதிலாக தொடு திரை பயன்படுத்தப்படுகிறது. சிறப்பு மூலப்பொருளால் தயாரிக்கப்பட்ட துண்டுகள் திரையைத் தொட்டவுடனே, விளையாட்டு பயன்பாட்டு நிரல் அதற்கேற்ற பதிலொளியை வழங்கும்.
புதிய விளையாட்டுப் பொம்மைகள் குழந்தைகளுக்கு கண்பார்வை, கேட்டல் திறன், தொடு திறன் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் புதிய விளையாட்டு அனுபவங்களை வழங்கும். அவர்களது உடல் திறன்கள் பல விளையாட்டில் பயன்படுத்தப்படும். பெற்றோரைப் பொறுத்த வரை, இத்தகைய விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிக் கொண்டு செல்வது மிகவும் எளிது. இவை நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடியவை.
குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற விளையாட்டுப் பொம்மைகளில் மென்மேலும் அதிகமான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும், தற்கால குழந்தைகளுக்கு நுண்மதி நுட்ப விளையாட்டுப் பொம்மைகளை மிகவும் பிடிக்கும் என்றும் பயன்பாட்டு நிரல் விளையாட்டுப் பொம்மைகளை விற்பனை செய்யும் வணிகர் வேப்பர் கூறினார்.
இதனிடையில், மனித பொம்மை, கட்டடக்கண்டம் முதலிய பாரம்பரிய விளையாட்டுப் பொம்மைகள் சந்தையில் இன்னும் அதிகமாக நிலவும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
சில பெற்றோர்கள் இத்தகைய புதிய விளையாட்டுப் பொம்மைகளைக் குறித்து கவலை தெரிவித்தனர். அவை குழந்தைகளை வயதிற்கு மிஞ்சிய புத்திசாலிகளாக ஆக்கிவிடும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர். மேலும் பாரம்பரிய குடும்ப வடிவத்திலான மேலும் நட்பார்ந்த, கல்வியறிவு வழங்கும் விளையாட்டுகளில் குழந்தைகளை கலந்து கொள்ள செய்ய விரும்புகின்றேன் என்று ஆன்லண் என்ற ஒரு தாய் கூறினார்.
பிரிட்டன் விளையாட்டுப் பொம்மை கண்காட்சி பிரிட்டன் நாட்டில் மிக அதிக செல்வாக்குடைய விளையாட்டுப் பொம்மை வணிகக் கண்காட்சியாகும். இவ்வாண்டு உலககின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த சுமார் 200 விளையாட்டுப் பொம்மை உற்பத்தி நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.