டெங்கு காய்ச்சல் முக்கியமாக Aedes aegypti கொசுக்கள் மூலம் பரவலாகும் ஒரு வகை வைரஸ் தொற்றுநோயாகும். இக்காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளிடையில் உயிர் இழப்பு விகிதம் மிக உயர்ந்து. ஓல்பாக்ஸ் எனும் பாக்டீரியா மூலம் டெங்கு காய்ச்சலைத் தடுக்கலாம் என்று ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் அண்மையில் கருத்து தெரிவித்தனர்.
இயற்கையில் சுமார் 28 விழுக்காட்டு கொசுக்களின் உடலில் ஓல்பாக்ஸ் எனும் பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால், மஞ்சள் காய்ச்சல் கொசுக்கள் எனப்படும் Aedes aegypti கொசுக்களில் இல்லை. ஆய்வாளர்கள் வடக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு ஆய்வு அறையில் ஓல்பாக்ஸ் எனும் பாக்டீரியாவைத் தொற்றிய Aedes aegyptiகொசுக்களை விடுவித்தனர். இந்த பாக்டீரியாவைத் தொற்றிய ஆண் Aedes aegyptiகொசுக்கள் சாதாரண பெண் Aedes aegyptiகொசுக்களை இனச்சேர்க்கை செய்த பின், பெண் Aedes aegyptiகொசுக்கள் கருத்தரிக்கமாட்டா. ஆனால், ஓல்பாக்ஸ் எனும் பாக்டீரியாவைத் தொற்றிய பெண் Aedes aegyptiகொசுக்கள் தொடர்ந்து கருத்தரிக்க முடியும். அதேவேளையில், இந்த பாக்டீரியா அடுத்த தலைமுறைக்கு வரும். தத்துவ அடிப்படையில், இந்தப் போக்கு தொடர்ந்தால், ஓல்பாக்ஸ் எனும் பாக்டீரியாவைத் தொற்றிய Aedes aegyptiகொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பாக்டீரியாவைத் தொற்றாத Aedes aegyptiகொசுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவிடும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலின் பரவல் தடுக்கப்படும்.
இந்த ஆய்வு பற்றிய கட்டுரை இயற்கை எனும் பிரிட்டனின் இதழில் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பாக்டீரியாவைத் தொற்றிய Aedes aegyptiகொசுக்களை விடுவிக்கும் நடவடிக்கைக்கு நிதியுதவி வழங்க விரும்புவதாக அமெரிக்காவின் காய்ஸ் நிதியம் தெரிவித்துள்ளது.