2011ம் ஆண்டின் முற்பாதியில் ஜெர்மனி, பிரான்ஸ். பிரிட்டன், அமெரிக்கா, சீனா முதலிய புவியின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள அதிக நாடுகளையும் பிரதேசங்களையும் கடுமையான வறட்சி பாதித்துள்ளது. மக்களின் வாழ்க்கையும் முக்கிய துறைகளின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடும் வறட்சிக்குப் பின்னர், சில நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அரிய இயற்கைச் சீற்றத்துக்கு காரணம் என்ன? மனித குலம் அதனை எப்படி சமாளிக்க வேண்டும்?
இவ்வாண்டின் ஜனவரி முதல் மே திங்கள் வரை, ஐரோப்பாவின் பெரும் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டது என்று உலக வானிலை அமைப்பு ஜுன் திங்கள் ஜெனீவாவில் வெளியிட்ட அறிக்கையில் கூறியது. பல நாடுகளில் வறட்சி நிலைமை வரலாற்றில் காணாத அளவு இருந்தது. சுவிட்சர்லாந்தில் 1864ம் ஆண்டு முதல் இதுவரை மிக வறட்சியான 10 ஆண்டுகளில் ஒன்றாக 2011ம் ஆண்டு திகழ்கிறது. பிரான்ஸில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் திங்கள் வரையான காலம், 1975ம் ஆண்டுக்கு பிறகு இதுவரையிலும் மிக வறட்சியான காலமாகும்.
வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பு மிக கடுமையானது. மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பயிர்களின் வளர்ச்சி மற்ற ஆண்டுகளில் இருந்ததை விட மோசமாக இருந்தது. பிரான்ஸின் 26 மாநிலங்களில் நீர் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட அறிவிக்கப்பட்டது.
சீனாவில், யாங்சி ஆற்றின் நடு மற்றும் கீழ்ப் பகுதியிலுள்ள சில பிரதேசங்கள் கடந்த நூறு ஆண்டுகளில் காணாத கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டன என்று தெரிகிறது.
இந்த அரிய நிலைமைக்கான காரணம் பற்றி வல்லுனர்கள் ஆராய்ந்தனர். முழு உலகக் காலநிலை மாற்றத்தின் பின்னணியில் லா நினா விளைவு என்பது இதற்குக் காரணமாகும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டின் இறுதி முதல் இவ்வாண்டின் வசந்த காலம் வரை நிகழ்ந்த La Nina பாதிப்புகள், சில பிரதேசங்களில் காலநிலை பிறழ்வுகளை ஏற்படுத்தின என்று உலக வானிலை அமைப்பு மே திங்களில் அறிக்கை ஒன்றில் கூறியது.
La Nina விளைவு என்பது எல் நின்யோ எதிர்விளைவு என்றும் அழைக்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் நடு மற்றும் கிழக்கு பகுதியில் கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட குளிராக மாறியதால், பசிபிக் பெருங்கடலின் மேலான வானில் ஈரமான காற்றின் அழுத்தம் குறைவாக மாறும். நடப்பு La Nina விளைவுச் சம்பவம் கடந்த ஆண்டின் ஜுலை திங்கள் நடுப்பகுதி ஆரம்பித்து, இவ்வாண்டின் ஜனவரி திங்களில் மிக உயரவாக பதிவாகி, மே திங்கள் முதல் படிப்படியாக குறைந்து வருகிறது.
காற்று அழுத்தம், காற்றாற்றல், மேக அளவு முதலிய மாற்றங்களின் படி, கடந்த ஒரு நூற்றாண்டில் மிக வலுவான இதுவாகும் என்று அறிவியலாளர்கள் கூறினர்.
La Nina விளைவின் குறைவுடன், பசிபிக் பெருங்கடல் நீரின் தட்பவெப்பம் அதிகரிக்கும். அதன் விளைவாக, வானிலுள்ள ஈரமான காற்றின் அழுத்தம் அதிகரிக்கும். தரைப்பகுதிக்கு அது அதிக மழை பொழிவைக் கொண்டுவரும். சில வேளைகளில் வறட்சி திடீரென வெள்ளப்பெருக்காக மாறும்.
La Nina மற்றும் எல் நின்யோ சம்பவங்கள் அதிகமாக மாறிமாறி வருவதால், சூறாவளி, வறட்சி, வெள்ளபெருக்கு முதலிய இயற்கை சீற்றங்கள் அதிகமாக வரும். இது உலக வெப்பமேறலின் ஒரு முக்கிய அறிகுறியாகும்.
நீர் சேமிப்பு வசதிகளைக் கட்டியமைப்பது, வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு தடுப்புக்கான நல்ல வழிமுறையாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
சீனாவின் மூமலை பள்ளத்தாக்கு நீர்சேமிப்புத் திட்டப்பணியில் அறிவியலாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். மூமலை அணையில் நீர் சேமிக்கப்பட்டப் பின், அதற்கு கீழுள்ள பகுதியின் ஈரமான காற்றின் தரத்தில் குறிப்பிட்ட மாற்றம் காணப்படவில்லை என்று அமெரிக்க எரியாற்றல் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பெல்க்லி தேசிய ஆய்வகத்தின் வல்லுநர்கள் 2005ம் ஆண்டு வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டனர்.
அமெரிக்க டென்னெசி அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் பிஃசெல் ஹுசேயின் அதே கருத்தை தெரிவித்தார். நீர்சேமிப்பு வசதிகளும் அணைகளும் ஒரு பகுதியின் காலநிலையில் குறிப்பாக மழை பொழிவில் ஏற்படுத்தும் தாக்கம் மிகமிகக் குறைவு என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் மேற்கு பகுதியில் தோன்றும் நீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், Hoover அணையைச் சீரமைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் வெளியிட்ட ஓரறிக்கையில் அறிவித்தது.