• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சட்டப்பூர்வத் தகுநிலை
  2012-04-05 15:59:19  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு திபெத்தின் நீர் டிராகன் புத்தாண்டுக்கான கொண்டாட்டம் முடிந்து விட்டது. தலாய் குழுமத்தின் புதிய தலைவர் அரை ஆண்டுக்காலத்துக்கு மேலாகப் பதவியில் இருந்து வருகிறார். அவரை முழுமூச்சுடன் ஆதரிக்கும் தலாய் லாமா மற்றும் திபெத்தியர் நிர்வாக மையம் அவரது பணி பற்றிய மதிப்பீடு எதையும் இன்னும் மேற்கொள்ளவில்லை. ஆனால், மார்ச் திங்கள் 10ஆம் நாள், தலைமை கலுன் பெயரில், அதாவது தலைமை நிர்வாக அதிகாரியின் பெயரில் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில், பேராசை கொண்ட இந்த இளைஞர் கூறியதாவது—"மதிப்பளிக்கத்தக்கவரின் வரலாற்றுத் தன்மை வாய்ந்த அரசியல் ஒப்படைப்பு, பொது மக்களின் நியமனம், திபெத்திலுள்ள திபெத் இனத்தவரின் ஆதரவு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் விளைவாக, திபெத்தியர் நிர்வாக மையம் சட்டப்பூர்வமாக 60 லட்சம் திபெத்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்களுடைய நலன்களை நாடுகிறது என நான் பெருமையுடனும் சுயநம்பிக்கையுடனும் கூறலாம்" என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய உரை நிகழ்த்த தலாய் லாமாவுக்கு துணிச்சல் இல்லை.

13வது நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, சீன நடுவண் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு நிர்வாகப் பிரதேசமாக திபெத் இருந்து வருகிறது. திபெத்தில் நிர்வாக உரிமையை நடைமுறைப்படுத்தும் சட்டப்பூர்வ அதிகாரத்தை நடுவண் அரசு உள்ளூர் அரசுக்கு வழங்குகிறது. அத்துடன், திபெத்தின் உள்ளூர் அரசு நடுவண் அரசின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டு, தனது பல்வேறு கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும். நடுவண் அரசுக்கும் திபெத்தின் உள்ளூர் அரசுக்கும் இடை நிர்வாகக் கட்டுப்பாட்டுறவை, தற்போது பெருவாரியான திபெத் மற்றும் சீன மொழியிலான கோப்புகள், அதிகார ஆவணங்கள், கல்வெட்டு எழுத்துக்கள் முதலிய தொல் பொருட்களில் தெள்ளத் தெளிவாகக் காண முடியும். திபெத்தின் நீர் மாடு ஆண்டில் திபெத்தின் உள்ளூர் அரசு திபெத்திலுள்ள நடுவண் அரசின் நிர்வாக வாரியத்திலிருந்து கிடைத்த கட்டளைகள், அறிவிப்புகள், விதிகள், அரசியல் விவகார விளக்கங்கள் முதலியவற்றை திபெத் சமூக அறிவியல் கழகம் மூலமாக அண்மையில் தொகுத்துச் சரிப்படுத்தியுள்ளது. இவற்றின் பெருமளவு எண்ணிக்கையும் விரிவான அம்சங்களும், சிங் வம்சத்தின் நடுவண் அரசு திபெத்தில் ஆட்சிபுரியும் விபரமான நிலைமையை வெளிப்படுத்துகின்றன. திபெத்தின் உள்ளூர் அரசின் அரசியல் விவகார நடவடிக்கைகள் நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற்றதை இது போதிய அளவுக்குக் காட்டுகிறது.

1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை அரசியல் அமைப்பு முறையி்ன் கட்டுக்கோப்புக்குள், தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சியை திபெத் புரிகிறது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவையும் அரசும், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம், தேசிய இனத் தன்னாட்சிச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் வழங்கும் பல்வேறு உரிமைகளையும் நலன்களையும் அனுபவிக்கிறது. அதன் சட்டப்பூர்வத் தன்மை சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. நாட்டின் சட்டவிதிகளின்படி, 1961ஆம் ஆண்டு திபெத்தின் பல்வேறு இடங்களிலும் பொதுத் தேர்தல் நடத்தப்படத் துவங்கியது. தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு நிலை மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1965ஆம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது முதல் இன்று வரை, தன்னாட்சிப் பிரதேசத்தின் 8 தலைவர்கள் திபெத் இனத்தைச் சேர்ந்தவர்களாவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக, திபெத் இன ஊழியர்கள் சிறப்பாக மேம்பாடு அடைந்து வருகின்றனர். விடுதலை பெற்ற அடிமைகள் பலர், பல்வேறு நிலைத் தலைவர் பதவியில் இருக்கின்றனர். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு நடைமுறைக்கு வந்த பின், தேசிய இன ஊழியர்களின் எண்ணிக்கையும் தரமும் பெருமளவில் உயர்ந்துள்ளன. சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசின் சட்டப்பூர்வத் தன்மை ஒருபோதும் சந்தேகம் கொள்ளப்படவில்லை.

தலாய் லாமாவின் பிளவுக் குழுமம், 1959ஆம் ஆண்டில் தொடுத்த ஆயுதக் கலகம் தோல்வியில் முடிந்தது. இக்குழுமம் திபெத்திலிருந்து தப்பி ஓடிய பின் தங்குமிடத்தில் புகலிட அரசை நிறுவியது. இவ்வரசு சீன நடுவண் அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், எந்த வெளிநாட்டின் அரசாலும் இந்தப் புகலிட அரசு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 2011ஆம் ஆண்டு மே திங்கள் 28ஆம் நாள், வெளிநாட்டில் தங்கியிருக்கும் திபெத்தியர்களால் 14வது திபெத் மக்கள் கூட்டம் என்று கூறப்படும் கூட்டத்தில், அரசியல் அமைப்புச் சட்டச் சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில், புகலிட அரசு, திபெத்தியர் நிர்வாக மையமாக மாற்றப்பட்டது. கேட்பதற்கு அரசு சாரா அமைப்பு போன்ற இப்பெயர், எந்த சட்டப்பூர்வத் தன்மையையும் கொண்டது அல்ல. இதன் மூலம் 60 லட்சம் திபெத் மக்களைப் பிரதிநிதிப்படுத்த வேண்டுமானால், தலாய் லாமா குழுமத்துக்கு ஏளனம் மட்டுமே கிடைக்கும்.

புதிதாக ஏற்றுள்ள தலைமை கலுனின் பின்னணியையும், ஒரு காலத்தில் வெளிநாட்டில் தங்கியிருக்கும் திபெத்தியர்களிடையில் அவர் ஏற்படுத்திய முரண்பாடு மற்றும் மனநிறைவின்மையையும் பார்த்தால், அவரது அகங்காரக் கூற்று, ஆற்றல் வெறுமையாகி விட்டதன் வெளிப்பாடு தான். இந்த இளைஞர் அமெரிக்கர் சிலரின் ஆதரவுடன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தங்களது பயிற்சி பெற்றவர் புகலிட அரசைக் கட்டுப்படுத்துவதை அவர்கள் வரவேற்கின்றனர். ஏனென்றால், இந்த இளைஞரைப் பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தி, அவர்களின் கருத்துகளை நிறைவேற்றிப் பரவலாக்கச் செய்வதற்கு இது துணைபுரியும். தலாய் லாமா தொடக்கத்திலான சந்தேகத்தைக் கைவிட்டு, அவருக்கு ஆதரவளிக்க வேண்டியிருந்தது. ஒருபுறம் அமெரிக்கரின் விருப்பத்தை தலாய் லாமா பின்பற்ற வேண்டியிருக்கிறது. மறுபுறம், மதப் பின்னணியும் குடும்பப் பின்னணியும் இல்லாத இளைஞர் ஒருவரைத் தெரிவு செய்வதன் மூலம், வெளிநாட்டில் தங்கியிருக்கும் திபெத்தியர்களிடையில் பல ஆண்டுகளாக நீக்கப்படாத குடும்பம், மதப் பிரிவு, இடம் ஆகியவை தொடர்பான சண்டையைக் குறைக்க அவர் ஒரு சார்பாக விரும்புகிறார். ஆனால், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற இந்த இளைஞர், பல ஆண்டுகளாக திபெத் இளைஞர் சங்கத்தின் தலைவராக பதவியேற்ற போதிலும், சீன நிலைமை பற்றியும், திபெத் மற்றும் திபெத் இனப் பகுதிகள் பற்றியும் அதிகமாக அறிந்து கொள்ளவில்லை. பல விவாதங்களிலும் சொற்பொழிவுகளிலும் அவர் தனது கூற்றை நிறைவு செய்ய முடியவில்லை. தவிர்க்க முடியாத சங்கடங்கள் பலவற்றை அவர் எதிர்கொள்வார் என பல்வேறு செய்தி ஊடங்களும் அவர் தலாய் லாமா குழுமத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கருத்து தெரிவித்துள்ளன. எடுத்துக்காட்டாக, வெளிநாட்டில் தங்கியிருக்கும் திபெத்தியர்களுடனான மனிதத் தொடர்பு அடிப்படை, குறிப்பாக பாரம்பரிய மதப் பின்னணி மற்றும் பண்பாட்டுப் பி்ன்னணி அவருக்கு இல்லை. சீன நடுவண் அரசு அவரை அலட்சியம் செய்வதால், தொடர்பு கொள்ளும் வழிமுறையை அவர் உருவாக்க முடியாது. சர்வதேசச் சமூகம் காத்திருக்கப் பார்க்கும் மனநிலையில் இருப்பதால், அவரது செயல்பாட்டு இடமும் செல்வாக்கும் விரிவாக்கப்பட முடியாது.

காலத்தின் வளர்ச்சி ஓட்டத்தை உண்மையாக அறிந்து கொள்ளுமாறு தலாய் லாமாவையும் அவரது ஆதரவாளர்களையும் நடுவண் அரசு பல ஆண்டுகளாக அறிவுறுத்தி வருகிறது. உண்மையைத் திரித்துப் புரட்டுவதன் மூலம் வெளிநாட்டவரின் ஈவிரக்கத்தைப் பெறுவது, வெளிநாட்டிலுள்ள திபெத் இன சக நாட்டவருக்கு தவறான பாதையில் வழிகாட்டும். திபெத் மக்களின் இன்பம் மற்றும் நலன்கள், குடிமக்கள் அனைவரும் சோஷலிசத் தாய்நாட்டில் கடினப் போராட்டம் நடத்துவதன் மூலம் பெறப்படுகின்றன. திபெத்திற்கு சுதந்திரம் பெறும் சாத்தியக்கூறு ஒன்றும் இல்லை. வலுவான தாய்நாடு மற்றும் வளர்ச்சி அடைந்த திபெத் தான், வெளிநாட்டில் தங்கியிருக்கும் மிகப்பல திபெத் இனச் சக நாட்டவரின் ஆதாரமாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040