• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செங் து நகரில் நீமா அம்மையாரின் புதிய வாழ்க்கை
  2012-04-05 16:03:16  cri எழுத்தின் அளவு:  A A A   
1974ஆம் ஆண்டு ஜூலை திங்கள் லாசா நகரில் பிறந்தார். அவர் கல்வி பயிலவில்லை. அவர் செங் து நகருக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. அவரது மூத்த மகள் செ சுவோவுக்கு வயது 13. அவரது இரண்டாவது மகள் யுயே பா காவுக்கு வயது 10. அவரது மூனறாவது மகள் யோங் ஜின் சுவோவுக்கு வயது 7. மூன்று மகள்கள் செங் து நகரில் உள்ள ஒரு தனியார் துவக்க நிலைப் பளிளியில் கல்வி பயில்கின்றனர். மூத்த மகள் இரண்டாவது வகுப்பில் கல்வி பயில்கின்றார். இரண்டாவது மகளும் மூன்றாவது மகளும் முதலாவது வகுப்பில் கல்வி பயில்கின்றனர். நீமா அம்மையாரின் கணவர் சிச்சுவான் மாநிலத்தின் கான் ஸி சோவில் உள்ள டெ கெ மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் கார்ட்செப்ஸ் பூஞ்சைகள் மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த உள்ளூர் பொருட்களின் வியாபாரத்தில் முக்கியமாக ஈடுபடுகிறார். செங் து நகரில் உள்ள வாழ்க்கையை பழக்கிக் கொண்டுள்ளதாக நீமா அம்மையார் தெரிவித்தார்.

செங் து நகரில் 4 ஆண்டுகள் வாழ்வது

நான் செங் து நகருக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன. வீட்டை வாடகைக்கு எடுத்து, குழந்தைகளை வளர்க்கிறேன். இந்நகரில் அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகம். திங்களுக்கு வாடகை தொகை 1500 யுவானாகும். ஒரு நாளில் ஒரு குழந்தையின் கைச் செலவுக்குப் பணம் சுமார் 20 யுவான் செலவாகிறது. திங்களுக்கு மூன்று குழந்தைகளுக்குச் செலவாகும் மொத்தப் பணம் சுமார் 800 யுவானாகும். உணவு, குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது. திங்களுக்கு என் குடும்பத்தின் செலவு சுமார் 5 ஆயிரம் யுவானாகும். எனது உடல் நிலை நன்றாக இல்லை. இதனால் மருந்துகளை அடிக்கடி வாங்க வேண்டியிருக்கிறது.

தற்போது, எனது மூன்று குழந்தைகள் பள்ளியில் கல்வி பயில்கின்றனர். ஓரளவு இளைப்பாக இருக்கிறேன். காலையில் அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறேன். மாலையில் அவர்களை பள்ளியிலிருந்து அழைத்து வருகிறேன். பகலில் ஓய்வு நேரம் அதிகம். இந்நகரில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் செல்லலாம். நான் களைப்பாக இல்லை.

தற்போது செங் து நகருக்கு வந்து சில ஆண்டுகள் ஆகி விட்டன. இந்நகரை நான் நேசிக்கிறேன். லாசா நகருக்கும், எனது கணவரின் ஊருக்கும் திரும்புவது குறைவு. ஒரு முறை ஊருக்குத் திரும்பி, சில நாட்கள் தங்கியிருந்து, அங்குள்ள வாழ்க்கையைப் பழக்கிக் கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன், எனது கணவர் என்னை பெய்சிங்கிற்கு அழைத்து வந்தார். நாங்கள் பெய்சிங்கில் சில நாட்கள் பயணம் மேற்கொண்டோம். பெய்சிங் மாநகரை நான் நேசிக்கவில்லை. அங்கு காற்று அதிகம். அங்குள்ள உணவுகளை நான் விரும்பவில்லை. செங் து நகர் நல்லது என்று கருதி, இங்கே திரும்பினேன்.

ஒற்றுமையும் ஒருவருக்கு ஒருவர் உதவி அளிப்பதும், திபெத்-ஹான் இனங்களுக்கிடை நட்புறவை வளர்க்கிறது

நான் இந்தக் குடியிருப்பு பிரதேசத்தில் தங்கத் தொடங்கிச் சில ஆண்டுகள் ஆகின்றன. இங்குள்ள வாழ்க்கையைப் பழக்கிக் கொண்டுள்ளேன். இங்கே இருப்பது நல்லது என்று கருதுகிறேன். இக்குடியிருப்புப் பிரதேசத்தில், திபெத் இனத்தவர்கள், ஹான் இனத்தவர்கள் சிலருடன் பழகி நண்பர்களாகியுள்ளேன். ஓய்வு நேரம் இருக்கும் போது, ஹான் இன நண்பர்களுடன் அடிக்கடி உரையாடுகிறேன். எனக்கு உதவிகள் தேவைப்படும் போது அவர்களை தொலைபேசியில் அழைக்கிறேன். கடந்த ஆண்டில் ஒரு கட்டத்தில், எனது உடல் நன்றாக இல்லை. பணியின் காரணமாக எனது கணவர் செங் து நகரில் அடிக்கடி தங்கியிருக்கவில்லை. ஹான் இன நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்ப்பதுண்டு. நாங்கள் நன்றாக பழகிக் கொண்டுள்ளோம். அனைவருக்கும் மற்றவரின் உதவி தேவைப்படுகிறது. சாதாரண நாட்களில் தொடர்பு கொள்ளவில்லை என்றால், இன்னல்களைச் சந்திக்கும் போது, நமக்கு உதவி அளிக்கும் நபர் யாரும் இருக்கமாட்டார்.

எனது மூன்று குழந்தைகளாலும் திபெத் மொழியிலும் மான்ட்ரின் சீன மொழியிலும் பேச முடியும். கடந்த ஆண்டு, நாள்தோறும் பிற்பகல் என் குழந்தைகள் ஒரு தனியார் பள்ளியில் 2 மணி நேரம் கற்றுக்கொண்டனர். கல்விக் கட்டணம் 300 யுவான் ஆகும். ஆனால் பயன்கள் அதிகமாக இல்லை. அவர்கள் இரண்டு திங்கள்கள் மட்டுமே கற்றுக்கொண்டனர். என் வீட்டில் அல்லது இதற்கு அருகில் உள்ள இடத்திலும், குழந்தைகளுக்கு பாடங்களைச் சொல்லிக்கொடுக்குமாறு ஆசிரியரை அழைக்க விரும்புகிறேன். என் குழந்தைகள் மேலதிக அறிவுகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

மக்களுடன் நண்பராக பழகிக் கொள்ள விரும்புகிறேன். என் நண்பர்களில், திபெத் இனத்தவர்களும் ஹான் இனத்தவர்களும் இருக்கின்றனர். எனது நண்பர்கள் பெய்சிங், ஷாங்காய், ஸெ ஜியாங், குவாங் சோ, ஷென் ஸென், ஹாங்காங், ஏன் வெளிநாடுகளில் கூட இருக்கின்றனர். என் அண்ணன் வாழும் புத்தர் ஆவார். அவரது குலபடி சீனாவின் பல்வேறு இடங்களில் இருக்கின்றனர். அவர் மூலம் பலரை அறிந்து கொண்டுள்ளேன். அவர்களில் பலர் திபெத்துக்கு செல்லும் போது, செங் து நகரைக் கடந்து செல்கின்றனர். சில சமயங்களில் அவர்களுக்கென தங்கியிருக்கும் உணவகத்தில் முன்பதிவு செய்கிறேன். இதன் மூலம் நாங்கள் நண்பர்களாகி விட்டோம். Zhe Jiang மாநிலத்தின் ஒரு வணிகர், என் அண்ணனுக்கு ஒரு காரை வழங்க விரும்பினார். ஆனால் என் அண்ணன் இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தார். மற்றவருக்கு நன்மை புரிய வேண்டும் என்று அவர் இந்த வணிகருக்குத் தெரிவித்தார்.

முன்பு ஹான் இன மக்களுக்கும், திபெத் இன மக்களுக்கும் பரிமாறிக் கொள்வது குறைவு. தற்போது, இவ்விரு இனங்களுக்கிடை பரிமாற்றம் மென்மேலும் அதிகரித்துள்ளது என்று கருதுகிறேன். முன்பு நான் ஹான் இனத்தவருடன் தொடர்பு கொள்ளவில்லை. ஹான் இன மக்கள் கெட்ட மக்கள் என்று கருதினேன். ஹான் இனத்தவருடன் தொடர்பு கொள்வதன் மூலம், ஹான் இன மக்கள் நல்லவர், அன்பானவர் என்று கண்டறிந்துள்ளேன். என் நண்பர்கள் இத்தகைய மக்கள் ஆவர்.

மத நம்பிக்கையில் ஊன்றி நின்பது

திபெத் இன மக்களுக்கு மத நம்பிக்கை உண்டு. செங் து நகருக்கு வந்த பின், குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். மத நடவடிக்கை நடைபெறும் இடம் இல்லை. பல்வகை நடவடிக்கைகளில் கலந்து கொள்வது குறைவு. கோயிலுக்கும் செல்வது குறைவு. சில சமயங்களில் விலங்குகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில் கலந்து கொள்கிறேன். என் குழந்தைகள் குறும்புத்தனமாக இருக்கின்றனர். என்னுடன் அடிக்கடி பழகும் நண்பர்கள் சிலர் போல் வீட்டில் நான் புத்தருக்கு வழிபாடு செய்கிறேன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040