• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லோசான் காச்சானின் வாழ்க்கை கதை
  2012-04-05 16:04:50  cri எழுத்தின் அளவு:  A A A   
65 வயதுடைய லோசான் காச்சான் சி ச்சுவான் மாநிலத்தின் காஞ்சி திபெத் தன்னாட்சி சோவைச் சேர்ந்தவராவார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் சென் து நகரிலுள்ள வூ ஹோ ஸி திபெத் இன குடியிருப்பிடத்தில் ஒரு வீட்டை வாங்கினார். சொந்த வீட்டில் உணவகத் தொழில் நடத்துவதில் அவர் 3 ஆண்டுகாலமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரது வாழ்க்கையை பற்றி நேயர்களிடம் லோசான் காச்சான் பகிர்ந்து கொள்கின்றார்.

2002ம் ஆண்டு நண்பர்களின் முன்மொழிவின் படி இந்த வீட்டை வாங்கினேன். எனது சொந்த ஊரைச் சேர்ந்த பலர் இங்கே வீடுகளை வாங்கினர். நண்பர்கள் ஒருவர்க்கொருவர் உதவி அளிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு நானும் இங்கே வீட்டை வாங்கினேன். சென் து நகரின் வானிலை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், என் தாய் 80 வயதுக்கு மேலானவர். அவருக்கு இதய நோய். சிங்காய்-திபெத் பீடபூமியில் ஆக்சிஜன் குறைவாக இருப்பது அவரது உடல் நலத்தைப் பாதிக்கும். இங்கே அதிக திபெத்தின மக்கள் வாழ்கின்றனர். முதியோரும் அதிகம். எனது தாயார் இங்கே வசித்து, அண்டைவீட்டு முதியோருடன் அளவளாவி மகிழ்ந்திருக்காலம். மேலும் 2003ம் ஆண்டு எனது மகள் மேனிலை பள்ளியிலும் மகன் ஜுனியர் இடை நிலை பள்ளியிலும் சேர வேண்யிருந்தது. சென் து நகரம் சி ச்சுவான் மாநிலத்தின் தலைநகராகும். இங்கு கல்வி தரம் உயர்ந்தது. இங்கே வீட்டை வாங்கி வாழ்வதன் மூலம் தாயை குழந்தைகளை நன்றாகக் கவனிக்கலாம் என்று எண்ணியதாக லோசான் காச்சான் கூறினார்.

வங்கியிலிருந்து பெற்ற கடன் மூலம் சொந்த வீடு வாங்கியதாக அவர் தெரிவித்தார். இந்த வீட்டில் 2 படுக்கை அறைகள், ஒரு உபசரிப்பு அறை, ஒரு சமையல் அறை, ஒரு கழிவு அறை ஆகியவை உள்ளன. அதன் மொத்த பரப்பளவு சுமார் 100 சதுர மீட்டராகும்.

வார இறுதி மற்றும் விழா நாட்களைத் தவிர இரண்டு குழந்தைகளும் பள்ளி விடுதியில் தான் தங்கியிருக்க வேண்டும். எனது மனைவி இன்னும் வேலையிலிருந்து விலகவில்லை. எனவே அடிக்கடி எனது ஊரில் தங்கியிருக்கிறார். ஆகையால், பொதுவாக நானும் எனது தாயும் இந்த வீட்டில் வாழ்கின்றோம். பல நண்பர்கள் சென் து நகருக்கு வந்தால் என்னை வந்து பார்க்கின்றனர். மாட்டிறைச்சி, வெண்ணெய், சிற்றுண்டி வகைகள் ஆகியவற்றை நண்பர்கள் கொண்டு வருகின்றனர். சிலவேளையில், அவர்கள் என் வீட்டில் தங்குகின்றனர். அவர்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கே வந்து என்னைக் காண வருகின்றனர். தவிர எனது சொந்த ஊரில் இருந்த போது அவர்கள் அடிக்கடி எனக்கு உதவி அளித்திருக்கின்றனர். ஆகையால், அவர்களுக்கும் நான் இயன்ற அளவில் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன். திபெத் மொழியைத் தவிர சீன மொழியிலும் என்னால் பேச முடியும். சில வேளைகளில் அவர்களுடன் சேர்ந்து சென் து நகரில் அலுவல்களைக் கையாண்டு அவர்களுக்கு உதவி செய்து வருகின்றேன்.

வீட்டில் தங்கும் விருந்தினரிடமிருந்து கட்டணம் வாங்குவது பற்றி லோசான் காச்சான் வருத்தத்தோடு பேசுகின்றார். சில அலுவல்களுக்காக எனது சொந்த ஊரிலிருந்து சென் து நகருத்து வருபவர் மென்மேலும் அதிகரித்து வருகின்றனர். லோசான் காச்சான் வீட்டில் தங்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. துவக்கத்தில் வந்தவர் குறைவுத் தான். தவிர, நகரத்தில் வாழ்வதால் ஏற்படும் நுகர்வு நிலைமை அவர்களுக்கு அவ்வளவாக தெரிவதில்லை. நகரில் வாழ்க்கைக் கட்டணம் அதிகம் என்பதை லோசான் காச்சான் கண்டறிந்தார். வீட்டில் தங்குபவர் அதிகமாக இருந்தால், கட்டணம் அதிகம் தான். திங்கள்தோறும் குழாய் நீர், மின்னாற்றல், இயற்கை வாயு ஆகியவற்றிற்குக் கட்டணம் செலுத்துவது கடினம் என்று லோசான் காச்சான் அறிந்து கொண்டார். வீட்டில் தங்குபவரிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று என்னை விட முன்னதாக இங்கே வீடு வாங்கிய திபெத் நண்பர்கள் என்னிடம் கூறினார். எனது விருந்தினர்கள் அதை புரிந்துள்ளனர். ஆகையால், ஒரு படுக்கைக்கு 16 யுவான் வசூலிக்கின்றேன். வீட்டில் பெரிய அறையில் 3 படுக்கைகளையும் சிறிய அறையில் 2 படுக்கைகளையும் வைத்திருக்கின்றேன்.

கட்டணம் வசூலித்தப் பிறகு, விருந்தினருக்கு வசதி அளிக்க, சென் து நகரின் சாலைகள், கடைகள், மருத்துவ வசதிகள் முதலியவற்றைப் பற்றிய தகவல்களைத் திரட்ட லோசான் காச்சான் முயற்சி செய்தார். எடுத்துக்காட்டாக, பல நண்பர்கள் மருத்துவரைப் பார்க்க சென் து நகருத்துக்கு வந்தனர். முன்பு, எந்த மருத்துவமனையில் எந்த நிலையிலான மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆய்வு மேற்கொண்ட பிறகு, மருத்துமனை, சிறப்புத் துறை, மருத்துவர் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பது பற்றி நன்றாக தெரிந்திருக்கின்றேன். விருந்தினருக்கு நல்ல உதவி செய்கின்றேன். அதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். காரணம், உயர் விலையிலோ தவறான பொருட்களையோ வாங்கினால் பரவாயில்லை. மீண்டும் அவற்றை நல்லதாக வாங்கலாம். ஆனால், நோய் நிலைமை மோசமாகினால் என செய்ய முடியும். நல்ல உடல் நலத்தை வாங்க முடியுமா?முடியாதல்லவா!

லோசான் காச்சான் எமது செய்தியாளரிடம் அதிக பெயர் அட்டைகளைக் காண்பித்தார். வாகன விற்பனை, பழுதுப் பார்ப்புத் துறை, வீட்டு பயன்பாட்டு மின் சாதன விற்பனை, சீன மூலிகை மருந்து கடை, மருத்துவ நிலையங்கள், விமானம், தொடர்வண்டி மற்றும் பேருந்து சீட்டு விற்பனை நிலையங்கள் முதலிய அட்டைகளை அவர் வைத்திருக்கின்றார். இந்தப் பெயர் அட்டைகள் விருந்தினர்களுக்கு உதவி செய்யும் போது மிகவும் பயன்படுகின்றன என்று லோசான் காச்சான் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040