காலை விருந்தினர் அதிகமில்லை. உரிமையாளர், சில சிறிய பயிற்சிகளை ஏற்பாடு செய்தார். இது லாமுக்கு மிக விருப்பமாயிற்று. கடந்த 4 ஆண்டுகளில், அவர் கற்றுக்கொண்டவை பல. சீன மொழி, கண்ணிய நடத்தை, தேசிய இன நடனம் ஆகியவை அவர் கற்றுக்கொண்டதில் முக்கியமானவை. எதிர்காலத்தில் லாசாவில் நீண்டகாலமாக வாழ வேண்டும் என்று லாமு திட்டமிடுகிறார். பெரிய நகரில் வாழ விரும்பினால், சிறந்த செயல் திறனை கொள்ள வேண்டும். அதனால், மேலதிகமான தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வது, அவரது வாழ்க்கைக்கு நல்ல தேர்வாகும் என்று அவருக்கு தெரியும்.
நண்பகல் உணவு உண்ணவரும் விருந்தினர்கள் அதிகம். எனவேலாமுவின் வேலை அதிகரித்தது. லாமு வேலை செய்து வரும் உணவகம் லாசாவில் புகழ் பெற்ற ஒன்று. வேறு இடங்களிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகள், அங்கே தனிச்சிறப்பு மிக்க திபெத் உணவுகளை சாப்பிடலாம். பயணிகள் அதிகமாக வரும் விறுவிறுப்பான சுற்றுலா காலத்தில் உணவகம் மிகசுறுசுறுப்பாக இயங்கும். இது லாமுக்கு ஒருபுறம் நல்லது மறுபுறம் கெட்டது. மேலதிகமான ஊக்கத்தொகை பெறுவது நல்ல அம்சம். ஆனால் நாள்தோறும் 10 மணி நேரத்துக்கு மேலான பணி என்பது கெட்ட அம்சம்.
நண்பகல், உணவகத்தில் சாப்பிட்ட பிறகு, மாலை உணவு ஏற்பாடுக்கு வேலைகள் செய்தது தவிர, உரிமையாளர் ஏற்பாடு செய்திருக்கும்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். இரவில், உணவகத்தில் உணவு உண்ட விருந்தினர் அனைவரும் புறப்பட்ட பிறகு தான் லாமுவின் பணி முடிவடையும்.
பணி முடிந்த பிறகு, அவர் விடுதிக்கு திரும்புவார். இந்த விடுதி, உணவகத்தால் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் அதிக வசதியில்லை. லாமு போன்று லாசாவில் வேலை செய்கின்ற இளம் பெண்கள், தனியான வீட்டில் வாடகை செலுத்தி வாழ்கின்றனர். வாடகை தொகை அதிகமில்லை. வசதிகள் அதிகம். ஆனால், லாமு அப்படி செய்யவில்லை. அதற்கு காரணமும் இருக்கிறது. இலவசமான விடுதியில் தாங்கினால், வாடகை தொகையை சேமிக்கலாம். ஒவ்வொரு திங்கள் செலவு, 200 முதல் 300 யுவான் வரை சேமிக்கலாம். எல்லாம் சேர்த்து, ஒவ்வொரு திங்கள் 700 யுவானை சேமித்து, வீட்டுக்கு அனுப்பலாம். லாமு வீட்டுக்கு 700 யுவான் என்பது பெரிய தொகை. லாமு வீடு லாசா நகரின் பக்கத்திலுள்ள லின் சோ மாவட்டத்தில் இருக்கிறது. அவர்கள் மொத்தம் 7 பேர். தாத்தாவையும் பாட்டியையும் பராமரித்து கவனிக்க வேண்டும். அண்ணன், படிக்கிறார். பெற்றோர் விவசாய வேலை செய்கின்றனர். குடும்பத்தின் நிலைமையை பார்த்து, 15 வயதில், படிக்கும் வாய்ப்பை கைவிட்டலாமு, லாசாவில் வேலை செய்து துவங்கினார்.
இரவில், லாசா அமைதி நிலவுகிறது. நாளை புதிய நாள். லாமு போன்ற லாசாவில் வேலை செய்கின்றவர்கள், அவர்களது அன்றாட வாழ்க்கை பணிகளை தொடர்வர். லாசா நகரத்தை, அவர்கள் விரும்புவர். இங்கே, அவர்கள் பணம் சம்பாதித்து, பகுத்தறிவு கற்றுக்கொண்டு, பல நண்பர்களை உருவாக்கி கொள்கின்றனர். தவிரவும், இந்த நகரில், அவர்களது தேசிய இன பழக்கம் உயர்வாக மதிப்பிடப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை இன்மாக உள்ளது.
பெரிய நகரில் வேலை செய்து சம்பாதிப்பது, திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடும்பங்களுக்கு முக்கிய ஊதிய வழிமுறையாகும். நகரப் பொருளாதார வளர்ச்சி, திபெத் விவசாயிகளுக்கும் ஆயர்களுக்கும் நிறைய வேலைவாய்ப்புகளை அளிக்கிறது. தற்போது, லாசா, ரிகாசே ஆகிய பெரிய நகரங்களில், சேவைத்துறை ஏராளமான விவசாயிகளை ஈர்க்கிறது. அவற்றில் உணவு சேவைத்துறை, அவர்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது.




அனுப்புதல்













