2011ம் ஆண்டின் இறுதி வரை தாயாஙா-1 எனும் சீனாவின் பெருங்கடல் ஆய்வுக் கப்பல் பெருங்கடலில் 22 முறை ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இது சீனாவின் பெருங்கடல் ஆய்வுத் துறையில் ஒரு புதிய பதிவாகியது.
உலக ரீதியான பெருங்கடல் ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்ட இந்தக் கப்பலின் பாதுகாப்பு, அறிவியல் தொழில் நுட்பச் சாதனங்கள், பணியாளர்களின் அன்றாட வாழ்க்கை, கடல் நிலைமையைப் பற்றிய முன்னறிவிப்பு, ஏற்பாடு மற்றும் தலைமைப் பணி முதலியவற்றுக்கு தேசிய கடல் வளத்துறை பணியகத்தின் பெய்காய் கிளையைச் சேர்ந்த சுமார் 150 பணியாளர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.
2011ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள் இக்கப்பல் குவாங் சோவிலிருந்து புறப்பட்டு, 369 நாட்களில் இந்து மாக்கடல், அட்லாண்டிக், பசிபிக் ஆகியவற்றைக் கடந்து 64 ஆயிரத்து 162 கடல் மைல் பயணம் மேற்கொண்டது. கப்பலின் முக்கிய எஞ்ஜின் 9 ஆயிரத்து 845 மணி நேரம் பணி புரிந்தது என்று சீனத் தேசிய கடல் வளத்துறை பணியகத்தின் பெய்காய் கிளை துணைத் தலைவர் லியு சின் செங் கூறினார்.
தாயாங்-1 கப்பல் 27 ஆண்டுகளுக்கு முன் கட்டியமைக்கப்பட்டது. சீனாவின் முதலாவது பன்னோக்க நவீன பெருங்கடல் ஆய்வுப் பயணக்கப்பல் இதுவாகும். அது அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
2014 முதல் 2020ம் ஆண்டு வரை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை செயல்பாடு என்ற திட்டத்தின் புதிய திட்டப்பணிகளுக்கு 320 கோடி யுரோவை ஒதுக்க ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பர் திங்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
இத்திட்டம் 1992ம் ஆண்டு செயல்படத் துவங்கியது. 2007 முதல் 2013ம் ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மொத்தம் 214 கோடியே 3 இலட்சம் யுரோ ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கான வரவு செலவைக் குறிப்பாக காலநிலைத் துறையிலான ஒதுக்கீட்டுத் தொகையை அதிகரித்தால், கரி குறைந்த பிரதேசத்தின் நிறுவுதல், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் நெடுநோக்குத் திட்டம் ஆகியவற்றுக்கு மேலும் சிறப்பாகத் துணை புரியும். தவிர, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், உள்ளூர் அரசுகள் ஆகியவை சிறிய ரக காலநிலைத் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இது துணை புரியும் என்று காலநிலை விவகாரத்துக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் உறுப்பினர் கான்னி ஹாஸ்கர் அம்மையார் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்புடைய விதிகளின் படி, இந்த ஆலோசனை ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் அனுமதியைப் பெற்ற பின்னர் தான் நடைமுறைக்கு வர முடியும்.
அஞ்சல் வெடி குண்டைக் கண்டறியும் புதிய வசதி
அடிக்கடி நிகழ்ந்த அஞ்சல் வெடிகுண்டு சம்பவங்களால், பல்வேறு நாடுகளின் அஞ்சல் துறைகள் அஞ்சல் பொதிகளின் மீதான பரிசோதனையை வலுப்படுத்தியுள்ளன. அண்மையில், ஜெர்மனின் புஃலோஹான்ஹோபு பொறியியல் அளவீட்டுத் தொழில் நுட்ப ஆய்வகம் ஒரு புதிய வசதியை உருவாக்கியுள்ளது. tera-hertz ஸ்கான் வசதி என்று அழைக்கப்படும் இந்த வசதியுடன், மக்களின் அஞ்சல் அந்தரக தன்மையைப் பாதிக்காத வகையில், அஞ்சல் பொதிகளிலுள்ள வெடிப்புப் பொருட்களைக் கண்டறியலாம்.
tera-hertz ஒரு வகை மின்காந்தமாகும். அதன் அலைநீளம் நுண்ணலைக்கும் அகச்சிவப்புக்கும் இடையில் உள்ளது. ஆடை, பிளாஸ்டிக், தோல் ஆகியவற்றை இது எளிதில் கடந்து செல்லும். எக்ஸ் கதிருடன் ஒப்பிடுகையில், அதன் போஃட்டான் ஆற்றல் குறைவானது. பொதுவாக உயிரினங்களின் திசுகளை அது பாதிக்காது என்று கூறப்படுகிறது.
இந்த tera-hertz வசதிகளை அஞ்சல் துறையில் அதிகமாகப் பயன்படுத்தினால், அஞ்சல் வெடிகுண்டுகளை முன்கூட்டியே கண்டறிந்து விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அஞ்சல் நிலையம், சிறை, தனிநபர் விடுதி முதலிய இடங்களில் இது பரவலாக பயன்படுத்தப்படக் கூடும் என்று தெரிகிறது.