முதல் காலக்கட்டம், 7 முதல் 9வது நூறாண்டு வரையான துபோ வம்சம். தாங் வம்சத்தின் உரிமைப் பிரதேசத்துக்குக் குடிபெயர்ந்த திபெத் மக்களில் துபோ வம்சத்தின் படையினர் மிக முக்கியமாக இடம்பெற்றனர். துபோ மக்கள் திபெத் மக்களின் மூதாதையர் ஆவர்.
இரண்டாவது காலக்கட்டம், 13 முதல் 14வது நூற்றாண்டு வரையான யூவான் வம்சம். யூவான் வம்சத்தின் ஆட்சியாளர்கள் பொதுவாக திபெத் மரபுவழி புத்தமதத்தை நம்புகின்றனர். திபெத் துறவிகள் அரசக் குடும்பத்தின் சிறப்பு வரவேற்பைப் பெற்றனர். பேரரசரின் ஆசிரியராக திபெத் துறவி பதவியேற்கும் அமைப்பு முறை உருவாக்கப்பட்டது. இதனால் திபெத் துறவிகள் பலர் யூவான் வம்சத்தின் தலைநகருக்கு விரைந்து சென்று, அங்கே தங்கியிருந்து வந்தனர்.
மூன்றாவது காலக்கட்டம், 14 முதல் 17வது நூற்றாண்டு வரையான மிங் வம்சம். அக்காலத்தில், திபெத் மட்டுமல்ல, திபெத் இனப் பகுதிகள் அனைத்திலும் உள்ள திபெத் மக்கள் சமவெளிக்குக் குடிபெயர்ந்தனர். துறவிகள் மட்டுமல்ல, திபெத் இனப் பகுதிகளின் தலைவர்களும் சமவெளிக்குக் குடிபெயர்ந்தனர்.
மேற்கூறிய 3 காலக்கட்டங்களில், ஒரு பொது தனிச்சிறப்பு தெளிவாகக் காணப்படலாம். அதாவது, அந்த 3 காலக்கட்டங்கள், சிங்ஹாய்-திபெத் பீடபூமி சமூகம், பெரிய மாற்றம் மற்றும் வளர்ச்சி அடைந்த முக்கியக் காலக்கட்டங்களாகும்.
வரலாற்றில், சமவெளிப் பகுதிக்கு திபெத்தியர்களின் குடிபெயர்வு, திபெத்தின் சொந்த வளர்ச்சியுடன் நெருக்கமான உட்புற தொடர்பு உடையது. திபெத்தின் வரலாற்றில், பெரும் வளர்ச்சி அடைந்த அனைத்துக் காலக்கட்டங்களிலும், சமூகச் சரிப்படுத்தல் நடைபெற்ற அனைத்து முக்கியத் திருப்பு முனைக் காலக்கட்டங்களிலும், சமவெளியில் அமைந்துள்ள இதரப் பிரதேசங்கள் நோக்கி திபெத்தியர்கள் பெருமளவில் குடிபெயர்ந்ததுண்டு. மேலும், இத்தகைய குடிபெயர்வுகள் ஒவ்வொரு முறையும் திபெத்தின் சமூக வளர்ச்சிக்குப் புதிய உயிராற்றல், திருப்பம் மற்றும் முக்கிய வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளன.
ஆனால், ஹான் இன மக்கள் திபெத்திற்கு குடிபெயர்ந்து, திபெத்தின் மூலவளத்தையும் வேலைவாய்ப்புகளையும் கொள்ளையடிக்க ஊக்கமளிப்பது அப்போதைய சீன நடுவண் அரசின் கொள்கையாகும். இது திபெத் இனப் பண்பாட்டுக்கு கடும் அறைகூவலாக அமைந்துள்ளது என்று சர்வதேச அளவில் அதிகமாகக் கூறப்படுகிறது.
உண்மையில், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், சீன மக்கள் உள்நாட்டில் தாராளமாகக் குடிபெயரும் உரிமை சட்டப்பூர்வ உத்தரவாதம் பெற்றுள்ளது. உள்பிரதேசத்தின் நகரங்கள் பலவற்றில் சிறுபான்மைத் தேசிய இன மக்கள் அதிகமாக காணப்படுகின்றனர். நகரங்களுக்கிடையில் அவர்கள் தாராளமாக போய் வருகின்றனர். திபெத் இன மக்கள், தெளிவான பண்பாட்டுத் தனிச்சிறப்புகளால், உள்பிரதேசத்தின் நகரங்களில் தங்கியிருக்கும் சிறுபான்மைத் தேசிய இன மக்களில் மிகச் சுறுசுறுப்பாக உள்ளனர்.
2011ஆம் ஆண்டு ஜுன் திங்களில் சீனத் திபெத்தியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஒரு கள ஆய்வின்படி, தற்போது, பெய்ஜிங், ஷாங்காய், செங்தூ, குவாங்சோ, சிநிங், லான்சோ, குன்மிங் உள்ளிட்ட பெரிய நகரங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த திபெத் இன மக்கள் உள்ளனர்.
பல தேசிய இனங்களைக் கொண்டிருக்கும் நாட்டில், பல்வேறு தேசிய இனங்களுக்கிடை நட்பு தொடர்பு, இணக்கமான சகவாழ்வு ஆகியவற்றுக்கான அடிப்படை, சமத்துவம், நியாயம், சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளுக்கான உத்தரவாதமே ஆகும்.
1949ஆம் ஆண்டு முதல், தேசிய இனச் சமநிலை, ஒற்றுமை மற்றும் கூட்டு முன்னேற்றத்துக்குத் துணைபுரிய, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசும் மேற்கொண்டு வரும் கொள்கைகள் பயன் தந்துள்ளன. குறிப்பாக, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்தது முதல், சீனாவில் சீன மக்களின் சட்டப்பூர்வ இடப்பெயர்வுக்கு சீன அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் சட்டவிதிகள் அனுமதி மற்றும் உத்தரவாதம் அளித்துள்ளன. ஹான் இனம் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் சுயேச்சையாக இடம் பெயர்ந்து, வேலைவாய்ப்பு தெரிவு செய்யும் அடிப்படை உரிமைகள் சட்டப்படி போதிய அளவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
பல்வேறு தேசிய இன மக்கள் திபெத்தில் வியாபாரம் செய்து, பணிபுரிந்து, பரிமாற்றம் செய்து, புனிதப் பயணம் மேற்கொள்ளும் அதேவேளையில், பெருவாரியான திபெத் இன மக்கள் திபெத்த் தன்னாட்சிப் பிரதேசத்திலிருந்தும், சிச்சுவான், சிங்ஹாய், கான்சூ, யுன்னான் ஆகிய மாநிலங்களின் திபெத் இனத் தன்னாட்சி சோ மற்றும் வட்டங்களிலிருந்தும், ஹான் இன மக்கள் குழுமி வாழும் பெரிய நகரங்களுக்கு வருகின்றனர். திபெத் இன மதம், பண்பாடு, உணவு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றையும் அவர்கள் ஹான் இனப் பகுதிகளுக்குக் கொண்டு வருகின்றனர். சமவெளியிலுள்ள நகரங்களின் பண்பாடு மற்றும் சந்தைத் தேவையை மிகப் பெருமளவில் செழுமைப்படுத்துவதோடு, அந்த நகரங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டுச் செழுமைக்கும் அவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
திறப்பு மற்றும் சகிப்பு, மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் இணக்கத்துக்கான முக்கிய அடையாளமாகும். 60 ஆண்டுகளுக்கு மேலான முயற்சியுடன், திபெத் மற்றும் இதர திபெத் இனப் பகுதிகளின் திறப்பு அளவு முன்பை விட பெருமளவில் உயர்ந்துள்ளது. ஹான் இனமும் திபெத் இனமும் முன்னெப்போழுதையும் விட அதிக அளவில் ஒன்றை ஒன்று ஒப்புக்கொண்டு ஏற்றுக் கொண்டுள்ளன. மக்கள் தொகை அதிகமாக உள்ள சிச்சுவான் மாநிலத்தில் நில வளம் மதிப்பு மிக்கதாகும். இம்மாநிலத்தில் திபெத் இன மக்கள் குழுமி வாழும் பகுதிகள் சில உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹான் இனத்துக்கும் திபெத் இனத்துக்கும் இடை உறவு வரலாற்றில் மிக நல்ல காலக்கட்டத்தில் இருக்கிறது. பெருவாரியான திபெத் இன மக்கள், ஹான் இன மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் தங்கியிருக்கும் நிலைமை இதைக் காட்டுகிறது.