14 கோடி ஆண்டுகள் முதல் 15 கோடி ஆண்டுகள் வரை முந்தைய Late Jurassic காலத்தில் வாழ்ந்த டைனசோர்களின் கால்தடங்களின் பல படிமங்களைக் கண்டறிந்துள்ளதாக பெய்ஜிங் மாநகரில் யேன் சிங் மாவட்ட அரசு ஜனவரி 9ம் நாள் அறிவித்தது. பெய்ஜிங் மாநகரில் சைனசோர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
2011ம் ஆண்டு ஜுலை திங்களில், சீன நிலவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலவியல் சிதிலப் பரிசோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் யேன் சிங் மாவட்டத்தில் அறிவியல் ஆய்வு மேற்கொண்ட போது இந்தப் படிமங்களைக் கண்டறிந்தனர். குய் ஹுவா மு என்ற தேசிய நிலவியல் பூங்காவிலுள்ள ஊதா நிறப் பாறைகளில் அவை கண்டறியப்பட்டன.
2011ம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள், சீனத் தேசியத் தொல்லுயிரியல் படிம ஆய்வு நிபுணர் குழுவின் சில உறுப்பினர்களும் தொடர்புடைய வல்லுநர்களும் யேன் சிங்கில் கண்டறியப்பட்ட படிமங்களை உறுதிப்படுத்தினர். அவை Late Jurassic காலத்தில் வாழ்ந்திருந்த டைனசோர்களின் காலதடங்களின் படிமங்களாகும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். Jurassic- Cretaceous காலம் இணைந்த போது shield cover டைனசோர்கள் பெய்ஜிங் மற்றும் தியேன் ஜின்னில் வடக்கு பகுதியிலும் மேற்கு லியாவ் நிங் பகுதியிலும் வாழ்ந்திருப்பதாக இந்தப் படிமங்கள் காட்டுவதாக மேற்கூறிய ஆய்வகத்தின் முனைவர் சாங் ச்சியேன் பிங் தெரிவித்தார்.
இந்தப் படிமங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, டைனசோர் கால்தடங்களின் படிமப் பாதுகாப்புப் பிரதேசத்துக்கான ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டத்தை யேன் சின் மாவட்ட அரசு வகுத்து வருகின்றது.