ஹா நி இனம், சீனாவின் தென்மேற்கு எல்லைப் பகுதியில் வாழ் மிக பழைய இனங்களில் ஒன்றாகும். இவ்வினத்தின் பெரும்பாலானோர், யுன்னான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள ஹுங் ஆறு மற்றும் லான் சாங் ஆறு இடையிலான பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தனிச்சிறப்பு வாய்ந்த வாழ்வுச் சுற்றுச்சூழல் காரணமாக, ஹா நி இனத்தின் ஆடைப் பண்பாடு செழுமையான்வை. கைவினை தயாரிப்புத் தொழில் நுட்பத்துடன், அதன் ஆடை வகைகளின் எண்ணிக்கை 100க்கு அதிகமாகும்.