ஏப்ரல் 12 முதல் 15ஆம் நாள் வரை, 2012ஆம் ஆண்டு CIGE சர்வதேச ஓவியக் கண்காட்சி, சீனச் சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. 2004ஆம் ஆண்டு, CIGE பண்பாட்டு நிறுவனம் பெய்ஜிங்கில் இக்கண்காட்சியை உருவாக்கியது. இப்போது அது ஆசியாவில் செல்வாக்குமிக்க சிறந்த ஓவியக கண்காட்சியாக மாறியுள்ளது. இக்கண்காட்சி, சீனாவின் சமகால ஓவியக் கலையின் வளர்ச்சி்ப்போக்கையும் மாற்றங்களையும் வெளிப்படுத்தி, ஓவியக் கலைத்துறையில் சர்வதேசப் பரிமாற்றங்களைத் தூண்டி வருகிறது. உலகின் பல பிரதேசங்கள் மற்றும் நாடுகளின் புகழ்பெற்ற ஓவியக் கூடங்கள் கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.