உலகை அறிந்துகொள்ள விரும்புகின்றேன் என்ற பெயருடைய அறிவியல் அறிவுகள் பரவல் திட்டப்பணியை சீன அறிவியல் கழகத்தின் கணினி இணையத் தகவல் மையம் அண்மையில் துவக்கியது. சீனக் குழந்தைகளிடையில் அறிவியல் அறிவுகளைப் பரவல் செய்து, அவர்களது கற்பனையையும் புத்தாக்கத்தையும் வெளிப்படுத்துவதற்கு இது இன்னொரு இணைய வசதியை வழங்கியது.
இத்திட்டப்பணி நாடளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அறிவியல் அறிவுகள் பரவலைத் தவிர, அறக்கொடையும் மேற்கொள்ளப்படும் என்று இத்திட்டப்பணியின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.
இத்திட்டப்பணிக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள www.keku.net.cn என்ற இணையத்தளத்தில் குழந்தைகள் அறிவியல் அறிவுகளைக் கற்று கொள்வதைத் தவிர, அறிவார்ந்த வளங்களை உருவாக்கும் விளையாட்டிலும் ஈடுபடலாம். மேலும், உண்மையான அறிவியலாளர்களுடன் சேர்ந்து தொல் பொருள் ஆராய்வது, தென் துருவத்துக்குச் சென்று ஆரோரா காட்சியைக்கண்டுகளிப்பது, உலகில் தலைச்சிறந்த Observatoryஇல் விண்கற்கள் பொழிவைக் கண்டுகளிப்பது முதலிய வாய்ப்புகளையும் குழந்தைகள் பெற முடியும்.
குறிப்பாக மேற்கு பகுதியில் அமைந்துள்ள வறிய கிராமப்புறங்களில் எளிதான தரமான அறிவியல் அறிவுப் பரவல் மையங்கள் கட்டியமைக்கப்படும். இந்த மையங்கள் குழந்தைகளுக்கு இலவசமாகச் சேவை வழங்கும் என்று தெரிகிறது.