லோயாங் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் புகழ் பெற்ற ஒரு வரலாற்றுப் பண்பாட்டு நகராகும். சியா, ஷான், தோ சொ, தோ ஹான், சிவே, தான் முதலிய 13 வம்சங்கள் முறையே இங்கே தலைநகரத்தை உருவாக்கின. இந்நகரின் வரலாற்றுக் காலம் 4 ஆயிரத்துக்கு மேலான ஆண்டுகளாகும். தலைநகராக இருந்த வரலாறு ஆயிரத்து ஐந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளைக் கொண்டதாகும். லோயாங் பியோனி நகராக அழைக்கப்பட்டுள்ளது. பியோனிக் கண்காட்சி லோயாங்கின் அடையாளமாகவும், லோயாங்கை உலக மக்கள் அறிந்துகொள்ளும் சன்னலாகவும் மாறியுள்ளது.