2012ம் ஆண்டில் ஹன் ஸில் பிரதேசத்தில் பெரும் அளவிலான அறிவியல் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சீன அறிவியல் சோதனைச் சங்கம் அண்மையில் அறிவித்தது.
சீனத் தேசிய அறிவியல் ஆணையம், சீன அறிவியல் கழகம், சீனத் தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகம், சிங்காய் மாநிலம் ஆகியவை 1990ம் ஆண்டில் இப்பிரதேசத்தில் அறிவியல் சோதனையை நடத்தின.
பல அறிவியல் சோதனை நடவடிக்கைகள் மூலம் கிடைத்த புதிய தகவல்கள் பாரம்பரியப் புவியியல் அறிவியல் கருத்து மற்றும் ஆய்வு முடிவுகளுக்குப் புதிய அறைகூவல்களை விடுத்துள்ளன. ஆகையால், இப்பிரதேசத்தில் ஒரு பெரிய அளவிலான ஒட்டுமொத்த அறிவியல் சோதனை நடவடிக்கையை உடனடியாக மீண்டும் நடத்த வேண்டியுள்ளது என்று ஹுநான் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூலவளம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் கழகத்தின் பேராசிரியர் ஹு துங் செங் கூறினார்.
உயிரின வாழ்க்கைப் பாதுகாப்பு நடவடிக்கையின் வலுப்படுத்தலால், ஹன் ஸில் பிரதேசத்தில் காட்டு விலங்குகளின் இனங்களும் எண்ணிக்கையும் தெளிவாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு செப்டெம்பர் திங்களில் இப்பிரதேசத்திலுள்ள சில ஏரிகளின் நீர் மட்டம் தீவிரமாக உயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
புதிதாகக் கண்டறியப்பட்ட உருமாறியப் பாறைகள், பண்டைக்கால மனிதரின் எஞ்சுதல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக ஏற்பட்டு வரும் ஏரி வெள்ளப்பெருக்கு நிலைமை முதலியவை புதிய அறிவியல் சோதனையில் ஆராயப்படும். ஹன் ஸில் பிரதேசத்தில் எந்தெந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன, எந்தெந்தக் காரணிகள் உயிரினச் சூழலைப் பாதிக்கின்றன, சிங்காய் திபெத் இருப்புப் பாதையும் சிங்காய் திபெத் நெடுஞ்சாலையும் எந்தெந்த பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளன ஆகியவை பற்றி நாங்கள் உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் ஹு துங்சங் கூறினார்.
ஹன் ஸில் பிரதேசம் சிங்காய் திபெத் பீடபூமியின் நடுப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் நிலப்பரப்பு சுமார் 2 இலட்சத்து 35 ஆயிரம் கிலோமீட்டராகும். முழு உலகின் காலநிலை மாற்றம் பற்றிய முன்னெச்சரிக்கைக்கான நுணுக்கமான பிரதேசமாக இது திகழ்கின்றது.