பிறகு சீன வானொலி நிலைய தேனீரகத்தில் அவர்கள் தமிழ் பிரிவின் பணியளர்களுடன் உரையாடினர். தமிழன்பனும் ஈஸ்வரியும் அவர்களைப் பேட்டி கண்டனர்.
சி.பி. மோகன் தம்பதியர் பெய்ஜிங்கில் ஓராண்டாக வசித்து வருகின்றனர். அவர்களின் நண்பரான பொன்.காசிராஜன் முதல்முறையாக சீனாவுக்கு சுற்றுலா வந்தார். அவர் பெய்ஜிங்கிலுள்ள சீனப் பெருஞ்சுவர், அரண்மனை அருங்காட்சியகம், சொர்க்கக் கோயில் முதலிய சுற்றுலா இடங்களுக்குச் சென்று பல நிழற்படங்களை எடுத்துள்ளார். பேட்டியளித்த போது, பொன். காசிராஜன், நிழற்படக்கலைஞர் வேலை, குடும்பம், பெய்ஜிங் பயணம், பெய்ஜிங்கிலுள்ள அருமையான அனுபவங்கள், சீன-இந்திய நட்புறவு முதலியவை குறித்து மகிழ்ச்சியுடன் கருத்துக்களை தெரிவித்தார்.
பேட்டி முடிந்த பிறகு, தமிழ் பிரிவின் தலைவர் கலைமகள் தமிழ் மூலம் சீனம் புத்தகத் தொகுதியையும் சீன பாரம்பரிய அன்பளிப்பு பொருளையும் அவர்களுக்கு வழங்கினார். கலைமகளும், துணைத் தலைவர் வாணியும் அவர்களுடன் நிழற்படங்கள் கொண்டநர்.