இரண்டாவது பன்னாட்டுத் தேயிலை பொருட்காட்சி, 2012ஆம் ஆண்டு மே 11 முதல் 13ஆம் நாள் வரை பெய்ஜிங்கிலுள்ள தேசிய வேளாண்துறை கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. தேயிலை, தேநீர், தேயிலை உணவு, தேயிலை உற்பத்தி சாதனங்கள் முதலியவை, இப்பொருட்காட்சியில் முக்கியமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டன.
மாநகரான பெய்ஜிங்கிற்குத் தேயிலை உற்பத்தி பொருட்கள் பெரிதும் தேவைப்பட்டுள்ளன. உள்நாட்டு தேயிலை நுகர்வுச் சந்தையின் முக்கிய பகுதியாக, பெய்ஜிங் இருக்கிறது. பெய்ஜிங்கின் தேயிலைச் சந்தையை விரிவாக்குவதோடு, இம்மாநகரின் தேயிலைப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை இந்தத் தேயிலைப் பொருட்காட்சி மேம்படுத்தியுள்ளது.
இப்பொருட்காட்சி நடைபெற்ற மூன்று நாட்களில் மொத்தம் 80 ஆயிரத்துக்கு மேலான பார்வையாளர்கள் இதனை வந்து பார்த்து ரசித்தனர். முழு நாட்டின் 20க்கு அதிகமான மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் பெய்ஜிங்கிற்கு வந்து இப்பொருட்காட்சி தொடர்பான பணிப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். மேலும், 20க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த தேயிலை விரும்பிகள், இக்கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டனர்.
தேயிலைப் பொருட்காட்சியில், தேயிலை வணிகர்கள், தத்தமது உற்பத்தி பொருட்களைப் பரப்புரை செய்ததைத் தவிர, சிறப்பு வாய்ந்த தேநீர் தொடர்பான செய்முறை அரங்கேற்றங்களை நடத்திக் காட்டினர்.
இலங்கை தேயிலை நிர்வாக ஆணையம், சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் முதலிய நிறுவனங்கள் பங்கெடுத்த 2012 இலங்கை கறுப்புத் தேயிலை பண்பாட்டு விழா, இந்த இரண்டாவது பண்பாட்டுத் தேயிலைப் பொருட்காட்சியில் சிறப்பாகத் துவங்கியது. தேநீரைச் சுவைத்து மகிழ்வது , தேநீர் செய்முறை அரங்கேற்றம், தேயிலைப் பண்பாட்டு விவரிப்பு முதலிய நடவடிக்கைகள், கறுப்புத் தேயிலை பண்பாட்டு விழாவில் நடைபெற்ன. அவை பார்வையாளர்களுக்குத் தனிச்சிறப்பு மிக்க இலங்கை கறுப்புத் தேயிலைப் பண்பாட்டைக் காட்டுகின்றன. இவ்விழா, அடுத்த 5 திங்களில் சீனாவின் பல பிரதேசங்களிலும் நடத்தப்படுமென தெரிகிறது.
அனுலா பெய்ஜிங்கிலுள்ள இலங்கை கறுப்புத் தேயிலை வணிகராக இருக்கிறார். அவரை பேட்டி காண்ட போது கூறியதாவது:
நான் அனுலா. இலங்கையைச் சேர்ந்தவர். தற்போது சீனாவில் இலங்கை கறுப்புத் தேயிலையை நான் விற்பனை செய்து வருகிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்தத் தேயிலையை சீனாவுக்கு கொண்டு வந்தோம். இலங்கையின் கறுப்புத் தேயிலை, குறிப்பாக உயர் தரமான கறுப்புத் தேயிலையின் ஏற்றுமதி தொகை, நீண்டகாலமாக உலகில் முதல் இடத்தை வகிக்கிறது.
தேநீர் குடிப்பதில் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே மாபெரும் வேறுப்பாடுகள் நிலவுகின்றன. இலங்கை மக்கள் குறிப்பிட்ட நேரம் தான் தேநீரைக் குடிப்பவர்கள். முற்பகல் 10 மணியளவிலும், பிற்பகல் 4 மணியளவிலும், இரவு உணவுக்குப் பிறகும், தேநீரைக் குடிக்கின்றனர். சீன மக்கள் தண்ணீர் குடிப்பது போல தேநீர் குடிக்கும் பழக்கம் உடையவராவர்.
எமது தொழில் நிறுவனம், 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை ஆறு ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. அடிப்படை பலவீனமாக இருந்த நிலையிலிருந்து தற்போதைய ஓரளவு வளர்ந்து வந்துள்ளது. எங்களுடன் ஒத்துழைத்து வரும் சீனப் பணியாளர்களுக்கு, நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன். அவர்கள் எனது குடும்பத்தினரைப் போல, என்னுடன் நண்பர்களாகியுள்ளனர்.
இவ்வாண்டு முதல், தேயிலை விற்பனை தவிர, கேக், பிஸ்கெட் முதலியவை உள்பட்ட தேயிலை தொடர்பான உணவுப் பொருட்களை நாங்கள் தயாரித்து விற்பனை செய்கிறோம். அடுத்து, சீனாவில் இறக்குமதி உணவை விற்பனை செய்யும் சிறப்பு இணையத் தளத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளோம். தலைசிறந்த உணவை, சீனாவின் பொது மக்களுக்கு நேரடியாக விநியோகிக்க விரும்புகிறேன் என்று அனுலா தெரிவித்தார்.