சி்ன்ய கிராமம், செச்சியாங் மாநிலத்தின் ஜியன்த மாவட்டத்தில் உள்ளது. சுமார் 700 ஆண்டுகால வரலாறு உடைய அக்கிராமத்தில், 16 பண்டைய மாபெரும் மண்டபங்கள், கோபுரங்கள் மற்றும் கோயில்களும், 200க்கு மேலான பண்டைய வீடுகளும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. நீண்டகால வரலாறு உடைய அக்கட்டிடங்கள், பல்வேறு வடிவங்களில் உள்ளன. எனவே, அக்கிராமம், உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கட்டிட நிபுணர்களால் சீனாவி்ன் மிங் மற்றும் ச்சிங் வம்சக் காலக்கட்டிடங்களின் திறந்த வெளி அருங்காட்சியகமாக அழைக்கப்படுகிறது.