இவ்வாண்டில் பகுதி சந்திர கிரகணம் ஒரு முறையும், பெனும்ப்ரல் சந்திர கிரகணம் ஒரு முறையும் ஏற்படும் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக சந்திர கிரகணம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவி நிழலின் நடுப்பகுதி கருநிழல் என்ற பொருளில் அம்ப்ரா எனவும், அதன் அருகிலுள்ள பகுதி புறநிழள் என்ற பொருளில் பெனும்ப்ரல் எனவும் அழைக்கப்படுகின்றன. சந்திரன் புவியின் பெனும்ப்ரலில் நுழைந்தால், பெனும்ப்ரல் சந்திர கிரகணம் ஏற்படும். சந்திரனின் ஒரு பகுதி, புவியின் umbraஇல் நுழைந்தால் பகுதி சந்திர கிரகணம் ஏற்படும். சந்திரன் முழுவதும் புவியின் umbraவில் நுழைந்தால் முழுச் சந்திர கிரகணம் ஏற்படும்.
இந்த முன்னறிவிப்பின் படி, இவ்வாண்டின் ஜுன் திங்கள் 4ம் நாள் பெய்ஜிங் நேரம் பிற்பகல் 6 மணியளவில் பகுதிச் சந்திர கிரகணம் துவங்கும். சந்திரனின் முழுத் தோற்றத்தை இரவு 8:06 மணியளவில் மீண்டும் காணலாம். ஆசியாவின் கிழக்குப் பகுதி, ஓசியானியா, பசிபிக் பெருங்கடல் பரப்பு, அண்டார்டிகா கண்டம், வடக்கு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்கு பகுதி முதலிய பிரதேசங்களில் இக்காட்சியைக் காண முடியும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் இக்காட்சியை மக்கள் மிகத் தெளிவாகக் கண்டுகளிக்க முடியாது. கிழக்குப் பகுதியில் மட்டும் இக்காட்சியின் ஒரு பகுதி காணப்படும் என்று தியேன் ச்சின் மாநகரின் வானியல் சங்கத்தின் உறுப்பினர் சாவ் ச்சி யேன் கூறினார்.
இவ்வாண்டு நவம்பர் 28ம் நாளிரவு முதல் 29ம் நாள் விடியற்காலை வரை ஏற்படவுள்ள பெனும்ப்ரல் சந்திர கிரகணம் சீனா முழுவதிலும் கண்டுகளிக்கப்படக் கூடியது. அப்போது, சந்திரன் புவியின் பெனும்ப்ரலைக் கடந்து செல்லும்.
புவியில் மக்கள் பெனும்ப்ரல் சந்திரன் கிரகணக் காட்சியை அவ்வளவு தெளிவாகக் கண்டுகளிப்பது இல்லை. ஆகையால், பொது மக்கள் சிறப்பாக இக்காட்சியைக் கண்டுகளிக்க முடியும் என்று வானியல் வல்லுனர்கள் தெரிவிக்கவில்லை.
மேற்கூறிய 2 வகைகளுடன் ஒப்பிட்டால் முழுச் சந்திர கிரகணக் காட்சி அழகானது. அடுத்த 10 ஆண்டுகளில், சீனாவில் மக்கள் மொத்தம் 7 முறை இக்காட்சியைக் கண்டுகளிக்க முடியும் என்று வானியல் முன்னறிவிப்பு கூறுகிறது.