ஜுன் 18ம் நாள் பிற்பகல் 2மணிக்கு, சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சிக் கூடமான தியெகுங்-1, 3 விண்வெளி வீரர்களை ஏற்றிய சென்சோ-9 விண்கலத்துடன் விண்ணில் சரியாக தானியங்கி முறையில் இணைந்தது. அவற்றுக்கிடை முதன்முறை மக்களால் இணைக்கப்படவுள்ள பணிக்காக அது ஆயத்தம் செய்தது.
16ம் நாள் மாலை 6:37 மணிக்குச் செலுத்தப்பட்ட சென்சோ-9 விண்கலம், விண்ணில் 10க்கும் மேலான நாடகளுக்குப் பறக்கும். இக்காலத்தில் அது 2வது முறையாக தியெகுங்-1 ஆராய்ச்சிக் கூடத்துடன் இணையும். முதலாவதாக, தானியங்கி முறையில் இணைந்த பிறகு, மக்களின் கட்டுபாட்டுடன் அவை இணைக்கப்படும் என்று தெரிகிறது.