நேயர்களே, இது ஷாங்காயிலுள்ள பியுன் பன்னாட்டுக் குடியிருப்புப் பிரதேசமாகும். சிறந்த அடிப்படை வசதிகளும் நவீன, பன்னாட்டு கல்வி சூழ்நிலையும் இங்கு காணப்படுகின்றன. அருமையான சுற்றுச்சூழல், அழகான கட்டிடங்கள் முதலியவை, இங்கு வாழ்கின்ற வெளிநாட்டவர்களுக்கு உயர்ந்த வாழ்க்கை நிலையை வழங்குகின்றன. இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறையில் பணி புரியும் ஜெஸ்டின் ஜோசர் குடும்பம் இங்கு தான் வாழ்கின்றது. இன்று அந்த குடும்பத்தை சந்திக்கிறோம்.