தொழில் துறையின் இயங்குதல் அறிவு மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, உள்நாட்டு வேளாண் துறையின் போட்டியாற்றலை உயர்த்த ஒரு புதிய அமைப்பை நிறுவுவதென ஜப்பானின் வேளாண், வனம் மற்றும் கடல் வளத் துறை அமைச்சகம் அண்மையில் முடிவு செய்தது. தொழில் ஒத்துழைப்பு வலைப்பின்னல் என்பது புதிய அமைப்பின் பெயராகும். ஜப்பானின் பொருளாதாரக் குழுச் சம்மேளனம், தேசிய வேளாண் துறை சம்மேளனத்தின் மத்தியக் குழு ஆகியவை இவ்வமைப்பை இயக்கும். ஜப்பானின் வேளாண், வனம் மற்றும் கடல் வளத் துறை அமைச்சகம் அதற்கு ஆதரவளிக்கும்.
தகவல் தொழில் நுட்பம் தொடர்பான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் தாவரத் தொழிற்சாலையை நிறுவுவது, உற்பத்தியாற்றலை உயர்த்துவது ஆகியவற்றுடன் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைப்பது முதலியவற்றிலும் இந்த அமைப்பு ஈடுபடும்.