• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  2012-07-16 14:44:24  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனில் முக்கிய நினைவுச்சின்னங்களை அண்மையில் நீல நிறமான ஒளி வளையங்கள் அலங்கரித்துள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்களுக்கு நினைவூட்டுவது இந்த நீல நிற LED ஒளி வளையங்களின் நோக்கமாகும்.

லண்டனில் செயின்ட் பால் கோயில் சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு தூண், சென்ட் ஜெம்ஸ் பூங்காவுக்கு அருகிலுள்ள கோமகன் யார்க் நினைவுத் தூண் முதலியவை அந்தக் கட்டிடங்களில் அமைந்துள்ளன. தரையிலிருந்து 28 மீட்டர் இயரத்தில் முக்கிய தூண்களை சுற்றி இந்த நீல நிற ஒளி வட்டங்கள் அமைந்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் உலக வெப்பமேறலைக் கட்டுப்படுத்தாவிட்டால், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், கடல் மட்டம் இந்த நீல நிற ஒளி வட்டத்தின் உயரத்தை அடையக் கூடும். அப்போது சென்ட் பால் கோயிலின் நுழைவு வாசல் முற்றிலும் கடல் நீரில் மூழ்கிவிடும். கோமகன் யார்க் நினைவுத் தூணுக்கு அருகில் அமைந்துள்ள பக்கிங்காம் மாளிகையும் முழுமையாக நீரில் மூழ்கிவிடும் என்று இவ்வொளி வளையங்கள் மக்களை எச்சரிக்கின்றன.

மைக்கல் பிங்ஸ்க்கி என்பவர் மீழ்குதல் என்ற பெயருடைய இந்தக் கலைப் படைப்பை வடிவமைத்தார். நீல நிற ஒளி வளையங்கள் பிப்ரவரி 7 முதல் மார்சு 4ம் நாள் வரை ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், கடல் மட்டம் 28 மீட்டர் உயராது என்று சில அறிவியல் ஆய்வுகள் கூறின. இருந்த போதிலும், உலக வெப்பமேறல் பிரச்சினையைக் கட்டுப்படுத்த மக்கள் தற்போது முயற்சி மேற்கொள்ளாவிட்டால், தேம்ஸ் நதியில் நீர் மட்டம் உயரும். லண்டனிலுள்ள பல கட்டிடங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று மைக்கல் பிங்ஸ்க்கி கருதுகிறார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040