சிங்காய்-திபெத் பீடபூமி நிலவியல் தத்துவத்தின் புதிய அம்சமும் தாதுப் பொருள் மூலவளத்தைக் கண்டறியும் துறையில் முக்கிய முன்னேற்றமும் என்ற திட்டப்பணி அண்மையில் 2011ம் ஆண்டுக்கான சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றச் சிறப்பு பரிசைப் பெற்றுள்ளது. சீன நிலவியல் பரிசோதனை ஆணையமும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிலவியல் தாதுப் பொருள் வளர்ச்சி ஆணையமும் இத்திட்டப்பணியைக் கூட்டாக நிறைவேற்றின.
3 மிகப் பெரிய உலோகம் செறிந்த நிலப்பகுதிகள், 7 மிகப் பெரிய தாதுப் படிவங்கள், படிவங்கள், 25 பெரிய தாது படிவங்கள் ஆகியவற்றை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அதன் மூலம், சிங்காய்-திபெத் பீடபூமி சீனாவின் முக்கிய நெடுநோக்குத் தாதுப் பொருள் சேமிப்புத் தளமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சீன நிலவியல் பரிசோதனை ஆணையத்தைச் சேர்ந்த லியூ பஃன் சான் கூறினார்.
சிங்காய்-திபெத் பீடபூமி ஆய்வில் தாது வளம் உருவாகும் தத்துவத்தில் சீன அறிவியலாளர்கள் மேலை நாட்டின் தத்துவ மாதிரியை விஞ்சி தங்களின் தலைமைத் தகுநிலையை உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் மூலம், சர்வதேசத்தில் பாரம்பரிய உலோகச் செறிவு தத்துவத்தின் வரையறையை விஞ்சி, உலக அளவில் உலோகச் செறிவு தத்துவ ஆய்வின் முன்னேற்றப் போக்குக்கு சீனா வழிகாட்டும் என்பது இத்திட்டப்பணியின் தனிச்சிறப்பாகும் என்று சீனத் தேசிய நில வள அமைச்சின் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவின் அலுவலர் மா யேன் கூறினார்.
மேற்கு பகுதி பெரும் வளர்ச்சி பெறுவதற்கான சீனாவின் நெடுநோக்குத் திட்டம், உயிரின வாழ்க்கை பாதுகாப்பு, சிங்காய் திபெத் பிரதேசத்தின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முதலியவற்றுக்கு இந்த முக்கிய முன்னேற்றம் பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.