சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு துவங்கிய 49ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று பெய்ஜிங்கில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்ப் பிரிவின் பணியாளர்களும், தமிழ் ஒலிபரப்பை ஆரம்பித்த முதல் தலைமுறை பணியாளர்களும், இலங்கை தூதரகத்தின் உயர் அலுவலர், பெய்ஜிங்கில் வாழ்கின்ற தமிழ் நண்பர்களும் ஆக சுமார் 70 பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
நண்பர்கள் மற்றும் நேயர்களின் ஆதரவில் முன்னோடிகள் ஆரம்பித்த தமிழ் ஒலிபரப்பு இலட்சியத்தைத் தொடர்ந்து கையேற்று வளரப் பாடுபடுவோம் என்று விழாவில் தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் கூறினார்.
பாடல், நடனம், சீனா மற்றும் இந்தியா ஆடை அணிவகுப்பு முதலிய கலைநிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு, விருந்தினர்களின் வரவேற்பைப் பெற்றன.
இந்த விழா பற்றி அடுத்த வாரம் முதல் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மற்றும் இணையத்தளத்தில் நிகழ்ச்சிகள் வழங்கப்படும்.