சீன ஒலிம்பிக்விளையாட்டு பிரதிநிதிக் குழு ஜீலை 25-ம் நாள் லண்டனில் ஒலிம்பிக் செய்திமையத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியதை அறிந்தேன். மேலும் இந்த 30வது கோடைகால ஒலிம்பிக்போட்டியிலும் சீன விளையாட்டுக்குழுவினர் சென்ற ஒலிம்பிக்கை போன்று அதிக தங்கப்பதக்கங்களை குவித்து பதக்க வேட்டையில் முதலிடம் பெறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சீன அணி அதிக பதக்கங்களை குவிக்க என்னுடைய கோடனா கோடி வாழ்த்துக்கள் மேலும் துவக்க விழாவின் போது. சீன தேசிய கொடியினை ஏந்தி செல்லும் கூடைப்பந்து வீரர் யீஜியன்லியன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
30-வது கோடைகால லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதலாவது தங்கப்பதக்கதை 10 மீட்டர் குழல் துப்பாக்கி சுடும் போட்டியில் சீனா வீராங்னை மதிப்பிற்குரிய தங்க மங்கை யீசிலிங் அவர்கள் சுட்டு தட்டி வந்திருப்பதன் மூலமாக சீனாவிற்கு பெருமை சேர்ப்பதன் மட்டும்மின்றி ஆசியா கண்டத்திற்கே மிகச்சிறந்த வெற்றி மகுடத்தை இவர் சூட்டி பெருமை சேர்த்திருக்கிறார். முதலாவது தங்கப்பதக்கம் முத்தான பதக்கம் என்றால் மிகையாகாது. சீனாவின் தங்கப்பதக்க வேட்டைக்கு மிகச்சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தி தந்திருக்கும் இந்த தங்கமங்கையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் பாராட்டுக்கள்.