தமிழ் ஒளிபரப்பின் 49-ம் ஆண்டு நிறைவு விழா என்னும் சீன வானொலி ஒளிபரப்பிய செய்தி மிக
அருமை.தமிழ் பிரிவுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.ஆரம்பகால தமிழ் பிரிவு தலைவர் சுந்தரம் அவர்கள்
முதல்,தற்போதைய தமிழ் பிரிவின் தலைவர் கலை மகள் அவர்கள் வரை உள்ளவர்களின் அயராத உழைப்பை இந்த 49-வது நிறைவு ஆண்டில் நினைவு கூறுவது தமிழர்கள் அனைவரது கடமையாகும்.
1963-ம் ஆண்டு சீன தலைவர் மாவோ அவர்களின் வேண்டுகோளை ஏற்று,சீன தமிழ் வானொலி பிரிவுக்கு தமிழ் பிரிவு நேயர்களால் வருடத்திற்கு சுமார் 5-லட்சம் கடிதங்களுக்கு மேல் அனுப்ப அரும்பாடுபட்ட தமிழ்
பிரிவில் பணியாற்றுவர்களை இந்த தருணத்தில் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.